தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் திரைத்துறையில் 12 ஆண்டுகள் பணியாற்றுவதை ஒரு அறிக்கையின் மூலம் நினைவு கூர்ந்துள்ளார். மேலும் அந்த அறிக்கையில் பயம் மற்றும் தூக்கம், வலி போன்றவைகளை ஒவ்வொரு நாளும் தான் அனுபவித்து உள்ளதாகவும்.
ரசிகர்கள் மற்றும் மக்கள் ஆதரவு தரவில்லை என்றால் என்னால் இந்த அளவிற்கு சினிமாவில் வளர்ந்து வந்திருக்க முடியாது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தற்போது இவர் நடிப்பில் உருவாக உள்ள படங்கள் பற்றி விவரம் தெரிவித்துள்ளார்.
- காடன்
- எஃப் ஐ ஆர்
- இன்று நேற்று நாளை 2
- சீலா
- கோபிநாத் இயக்கும் ஜீவி
போன்ற பல படங்களில் நடித்து வருவதாகவும். இப்படம் விரைவில் திரைக்கு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சுவாரசியமான கதைகளை கேட்டு வருவதாகவும் மற்றும் பல இயக்குனர்களுடன் பணிபுரிய உள்ளதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் இவர் குடிபோதையில் அடுக்குமாடி குடியிருப்பில் அருகாமையில் இருப்பவர்களிடம் ரகளை செய்ததாக போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். அதற்கு விஷ்ணு விஷால் குடிபோதையில் இருக்கும் ஒரு நபர் எப்படி சிக்ஸ்பேக் வைத்து கொண்டிருக்க முடியும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
அதனை மையப்படுத்தி கடைசி ஆண்டில் வாழ்க்கையிலும் சரி, திரை வாழ்க்கையிலும் சரி பல துக்கங்கள் மற்றும் வேதனைகள் அனுபவித்து உள்ளதாகவும். ஆனால் வாழ்க்கையில் இதெல்லாம் அனைவருக்கும் அனுபவித்து தான் இருப்பார்கள் என்றும். எனக்கு ஆதரவு கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

விரைவில் இவரது நடிப்பில் படங்கள் திரையரங்கில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.