புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மீண்டும் இணையும் ஹாரர் கூட்டணி.. விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் விஷ்ணு விஷால் நடித்து மற்றும் முதன் முதலில் தயாரித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கட்டா குஸ்தி. இந்த படம் இவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்து ஒரு நல்ல திரைப்படத்தை கொடுப்பதற்காக பல இயக்குனரிடம் கதை கேட்டு வந்தார்.

கடைசியாக இவர் இயக்குனர் ராம்குமாரிடம் கதை கேட்டிருக்கிறார் அது இவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த இயக்குனர் மற்றும் விஷ்ணு விஷால் ஏற்கனவே இணைந்து இரண்டு வெற்றி படங்களான முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் கொடுத்து இருக்கிறார்கள்.

Also read: ஒரே படத்தில் நடித்து இறந்து போன 3 நடிகர்கள்.. அதிர்ச்சியில் விஷ்ணு விஷால்

இந்த இரண்டு படங்களும் வெவ்வேறு வித்தியாசமான கதைகளை கொண்டிருந்தது. முண்டாசுப்பட்டி முழுக்க முழுக்க காமெடி படமாக இருந்தது. அதை தொடர்ந்து ராட்சசன் படம் சைக்கோ திரில்லர் கதையின் மூலம் பார்வையாளர்கள் அனைவரையும் மிரள வைத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணியான இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலின் 21-வது படத்தில் இணைகிறார். இந்த படத்தை பெரிய நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க போவதாக டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Also read: விஜய் சேதுபதியை ஓரங்ட்டி ஜெயித்த விஷ்ணு விஷால்.. குஸ்தி முதல் நாள் வசூலை பார்த்து வாயைப் பிளந்த டிஎஸ்பி

இந்த முப்பெரும் கூட்டணி ஒரே படத்தில் இணைவதால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விஷ்ணு விஷால் நடித்த கடைசி படமான கட்டா குஸ்தி காமெடி கலந்த ஒரு திரைப்படமாக இருந்தது. இதை எடுத்து இவரின் அடுத்த படமானது ஒரு சீரியசான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர்,தயாரிப்பாளர் மற்றும் விஷ்ணு விஷால் இவர்கள் இணைந்து மகிழ்ச்சியுடன் எடுத்த போட்டோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். பொதுவாகவே விஷ்ணு விஷால் ஒரு புதுவிதமான கதையை தேர்ந்தெடுக்கக் கூடியவர்.அதேபோல இந்தப் படமும் ஒரு வித்தியாசமான கதையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: பல வருடம் போராடி ஜெயித்த காமெடி நடிகர்.. திருப்புமுனையை ஏற்படுத்திய விஷ்ணு விஷால் படம்

Trending News