வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஷ்ணு விஷால் முன்னாள் மனைவி இந்த நடிகரின் மகளா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் சமீபத்தில் தன்னுடைய முதல் மனைவி ரஜினி என்பவரை விவாகரத்து செய்துவிட்டு பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா குட்டா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முதல் மனைவிக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இத்தனைக்கும் உருகி உருகி காதலித்தவர்கள்தான்.

vishnu-vishal-rajini-cinemapettai
vishnu-vishal-rajini-cinemapettai

ஆனால் விஷ்ணு விஷால் ஜுவாலா குட்டாவிடம் கணக்கு வழக்குகள் சிலவற்றில் வசமாக மாட்டிக் கொண்டதால் அதிலிருந்து தப்பிப்பதற்காக அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக ஒரு செய்தி கோலிவுட் வட்டாரங்களில் நீண்ட நாட்களாக சுற்றிக்கொண்டிருக்கிறது.

இது தேவையில்லாத வதந்தி என்பதால் அவரும் அதற்கு பதில் அளிக்காமல் சமீபத்தில் ஜூவாலாவை திருமணம் செய்து கொண்டார். ஊரடங்கு சமயத்தில் நடந்த கல்யாணம் என்பதால் பெரிய அளவு யாரையும் கூப்பிடவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் விஷ்ணு விஷால் மற்றும் அவரது முன்னாள் காதலி ரஜினி என்பவருக்கு ஆரியன் என்ற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாகவே விஷ்ணு விஷாலின் முதல் மனைவி பிரபல நடிகர் கே என் நடராஜன் என்பவரின் மகள் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது.

actor-natarajan-cinemapettai
actor-natarajan-cinemapettai

கே நடராஜன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும், நல்ல நட்பின் காரணமாகத்தான் அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தை இவர் இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News