திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அந்த இயக்குனரை நம்பி நடிச்சது தப்பா போச்சு.. அழுது புலம்பும் விஷ்ணு விஷால்

Vishnu Vishal laments the loss of Lal Salam: வெண்ணிலா கபடி குழு மூலமாக  தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷ்ணு விஷால் தொடர்ந்து நல்ல கதை அம்சத்துடன் கூடிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த படம் வெளிவந்து 15 ஆண்டுகள் ஆனதை ஒட்டி எனது படங்களின் மூலம் சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை எடுத்து சொல்ல முயன்றுள்ளேன் என்று பெருமைப்பட்டுக் கொண்டார் விஷ்ணு விஷால்.

முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற படங்களின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துள்ள விஷ்ணு விஷால் தொடர்ந்து சிறப்பான திரைக்கதையுடன் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில்  ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் தோன்றி விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் வெளிவந்த லால் சலாம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று எதிர்பார்த்த வசூலை எட்ட முடியாமல் தடுமாறி வருகிறது.

Also read: விஜய் தம்பி வளர கூடாது என திட்டம் தீட்டும் விஷ்ணு விஷால்.. வாரிசு நடிகருக்கே இந்த நிலைமையா!

லால் சலாம் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு விழாவில் ரஜினிகாந்துடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி எனவும், எனது பயணம் சரியான நேரத்திலும் சரியான திசையிலும் உச்சத்தில் செல்வது மகிழ்ச்சி என்று புகழ் பாடினார் விஷ்ணு விஷால்.

தற்போது படம் பிளாப்பானதை தொடர்ந்து இந்த படத்திற்காக 40 நாள் கால்ஷீட் கேட்டு படப்பிடிப்பை 90 நாள் வரை இழுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னை ஏமாற்றி விட்டதாக புலம்பி வருகிறார் விஷ்ணு. வெற்றியில் பங்கெடுத்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் தோல்வி என்று வரும்போது தனக்கு சம்பந்தம் இல்லாதவராக ஓடிக் கொள்ளவே கடமைப்பட்டு விடுகின்றனர். இதற்கு விஷ்ணு விஷால் என்ன விதிவிலக்கா?

லால் சலாம் படம் ஹிட்டாகி இருந்தால் விஷ்ணு இப்படி பேசுவாரா? உண்மையிலேயே இப்படத்திற்காக விக்ராந்துடன் முதலில் நடிக்க பேசப்பட்டது அதர்வாவை தானாம். உதயநிதியின் குறுக்கீட்டினாலே அதர்வாவிற்கு பதிலாக விஷ்ணு விஷால் களம் இறக்கப்பட்டார்.

அதர்வாவை நடிக்க விடாமல் பண்ணிவிட்டு இப்போது புலம்புவது என்ன நியாயம்  இப்படியே பண்ணிட்டு இருந்தா திரைத்துறையில் இருக்க மாட்டார் என்று சினிமா ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். எல்லாம் உதயநிதி கொடுக்கிற சப்போர்ட்ல தான் இவர் இந்த ஆட்டம் ஆடுகிறார் என்பதாகவும் பேச்சு உலவுகிறது. எனத்த சொல்லுறது வட போச்சே!

Also read: லால் சலாம் பட தோல்விக்கு இவர்தான் காரணம்.. கூச்சமே இல்லாமல் பழி போடும் ஐஸ்வர்யா

Trending News