வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் விஷ்ணு விஷால்.
அதற்குப் பின் வெளிவந்த நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
தற்போது F.I.R என்ற படத்தை முடித்து வெளிவரவும் காத்துக் கொண்டிருக்கின்றது. நடிப்பைத் தாண்டி ஒரு சில படங்களை தயாரிப்பாளராகவும் பெரும் தொகையை முதலீடு செய்து வருகிறார் விஷ்ணு விஷால்.
சில மாதங்களுக்கு முன்பு தான் விஷ்ணு விஷாலுக்கு ஜூவாலா என்ற டென்னிஸ் வீராங்கனை உடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அவர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாவது மனைவி.

இந்த நிலையில் பண்டைய கால சிகிச்சை முறையான கப்பிங் தெரபி என்ற சிகிச்சை தற்போது எடுத்துள்ளார். இது தொடர்பான போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கடினமான பயிற்சியும், கடினமான மீட்பு என பதிவிட்டுள்ளார்.

உலக அளவில் உள்ள விளையாட்டு வீரர்களும், திரைத்துறையில் உள்ள பிரபலங்களும் இதுபோன்ற சிகிச்சைகளை அடிக்கடி செய்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பார்க்க ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.