வியாழக்கிழமை, டிசம்பர் 19, 2024

நீர்ப்பறவை படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகர்.. மிகப்பெரிய வாய்ப்பை தவற விட்டதால் புலம்பல்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் சீனு ராமசாமி கூடல்நகர் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் மூலமாக நடிகர் விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதுமட்டுமின்றி இப்படம் தேசிய விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான தர்மதுரை, கண்ணேகலைமானே, நீர் பறவை, உள்ளிட்ட அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து ஆக்ஷன் திரில்லர் படம் ஒன்றை சீனுராமசாமி இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் வெளியான நீர்ப்பறவை படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாறுபட்ட கதை களத்தில் உருவாகியிருந்த நீர்ப்பறவை படத்தில் விஷ்ணு விஷால், சுனைனா, நந்திதா தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருந்தனர்.

vimal-cinemapettai
vimal-cinemapettai

குடிக்கு அடிமையான ஒரு இளைஞன் அதிலிருந்து எப்படி மீள்கிறான், அவனது காதல் கைகூடியதா உள்ளிட்ட பல பரிமாணத்தில் இப்படம் உருவாகியிருந்தது. இதில் நடிகர் விஷ்ணு விஷால் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி இப்படத்தின் கதையை எழுதியதும் முதலில் இப்படத்தில் நாயகனாக நடிக்க நடிகர் விமலை தான் முடிவு செய்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் நடிகர் விமல் வேறொரு படத்தில் பிஸியாக நடித்து வந்ததால் இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போயுள்ளது. அதற்கு பின்னர் தான் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்திற்கு தேர்வாகியுள்ளார்.

- Advertisement -

Trending News