தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் தான் விஷ்ணு விஷால். மேலும் இவருக்கு நடிப்பைத் தாண்டி கிரிக்கெட்டிலும் அதிக ஆர்வம் இருக்கிறது.
தற்போது இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருவதால் தன் உடலை மெருகேற்றுவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
எனவே நீண்ட நாட்களாக கடின உடற்பயிற்சி மேற்கொண்ட விஷ்ணுவிஷால், தற்போது சிக்ஸ் பேக் உடன் காட்சி அளிக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு திரை உலகையே மிரள வைத்துள்ளார்.
இந்த லுக்கில் விஷ்ணுவிஷால் செம்ம ஹாண்ட்சமாக காட்சி அளிப்பதால் ரசிகைகளின் கூட்டம் மொய்க்க தொடங்கி விட்டது.

அதுமட்டுமில்லாமல் இவருடைய இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதன்பின் விஷ்ணு விஷாலுக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.