வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

வசூலில் பிச்சி உதறிய விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி.. தலைகீழா மாறி சோடை போன டிஎஸ்பி

இந்த வாரம் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி மற்றும் விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இதற்கு முன்பே வெளியான பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானாலும் தற்போது திரையரங்குகளிலும் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் நெகட்டிவ் விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில் கட்டா குஸ்தி படம் வசூல் வேட்டையாடி வருகிறது. செல்ல அய்யாவு இயக்கத்தில் எடுக்கப்பட்ட கட்டா குஸ்தி படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

Also Read : சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியால் மோசம் போன இயக்குனர்.. மொத்த தப்பையும் இப்படி என் தலையில இறக்கிட்டீங்களே!

மேலும் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குஸ்தி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் காமெடியில் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் கருணாஸ் பின்னி பெடல் எடுத்து உள்ளனர்.

கட்டா குஸ்தி படத்தை பார்க்க வருபவர்களுக்கு 100% சிரிப்பு உறுதி என்பதை ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அந்த அளவுக்கு ஃபேமிலி என்டர்டைன்மென்ட் படமாக கட்டா குஸ்தி அமைந்துள்ளது. இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் மீண்டும் தனது முத்திரையை பதித்துள்ளார்.

Also Read : விஜய் சேதுபதியின் நிறைவேறாத ஆசை.. வெளிப்படையாக பேட்டியில் கூறிய சம்பவம்

இந்நிலையில் கட்டா குஸ்தி படம் வெளியாகி மூன்றே நாட்களில் உலகம் முழுவதும் 13 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 7 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாம். கட்டா குஸ்தி படத்துக்கு தொடர்ந்து நேர்மையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.

இதனால் வரும் வாரங்களில் வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதியின் டிஎஸ்பி படம் மோசமான விமர்சனத்தினால் 5 கோடி வசூலை கூட அடைய முடியாமல் திணறி வருகிறது. விஜய் சேதுபதிக்கு பெருத்த அடியாக டிஎஸ்பி படம் அமைந்துள்ளது.

Also Read : மீண்டும் சந்தனமாக நடிக்க மாட்டேன்.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு

Trending News