வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

என்ன தரையில பேசினதெல்லாம் திரையில வருது.. பிக்பாஸ் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்த விஷ்ணு

Biggboss 7: இந்த வார ஆரம்பத்திலேயே பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு செம ட்விஸ்ட் வைத்தார். மக்களால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டிருந்த மூன்று போட்டியாளர்கள் மீண்டும் திரும்ப வரப்போகிறார்கள் என்பதுதான் அந்த வெடிகுண்டு.

இதை கேட்டதுமே வீட்டில் இருந்த ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் நிலநடுக்கம் வந்த குறையாக ஆடி போனார்கள். அதைத்தொடர்ந்து மிகப்பெரிய ஆலோசனை கூட்டம் நடத்தி யாரையும் உள்ளே வர விட கூடாது என ஒரு மனதாக அனைவரும் முடிவெடுத்தனர்.

Also read: அர்ச்சனாவின் கேம்க்கு பின்னாடி குருநாதரின் மாஸ்டர் பிளான்.. மைண்ட் வாய்ஸ்ல உளறிய தினேஷ், மணி

அதை தொடர்ந்து தங்களுடைய திட்டத்தையும் செயல்படுத்த தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் விஷ்ணு இப்போது பிக்பாஸின் மைண்ட் வாய்சை சரியாக கேட்ச் பிடித்திருக்கிறார். தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் அவர் பேசியிருக்கும் ஒரு விஷயம் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கிறது.

அதாவது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சில டம்மி பீஸ்களை வெளியில் துரத்தி விட்டு மூன்று பேரை உள்ளே வரவைக்க திட்டம் போட்டுள்ளார். இதன் மூலம் விளையாட்டை சுவாரஸ்யமாக மாற்றுவது தான் அவருடைய பிளானாக இருக்கும் என்று தினேஷிடம் கூறுகிறார்.

Also read: மிக்சர் விக்ரம் தான் தப்பிச்சான்னு பாத்தா, மிக்சர் குடோனும் தப்பிக்கிது.. நல்லா உருட்டும் பிக்பாஸ் நாமினேஷன்

நிச்சயம் இப்படி ஒரு ப்ளானில் விஜய் டிவி இருக்கலாம். அதைத்தான் இப்போது ரசிகர்கள் ஆர்வத்துடன் உற்று நோக்கி வருகின்றனர். அந்த வகையில் விஷ்ணுவுக்கு இந்த விளையாட்டின் புரிதல் நன்றாகவே இருக்கிறது. அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் இறுதி போட்டி வரை வருவார்.

ஆக மொத்தம் தரையில பேசினதெல்லாம் திரையில வருது என்பதாக விஷ்ணுவின் பேச்சு பிக்பாஸை யோசிக்க வைத்திருக்கும். அந்த அளவுக்கு இவர் சேனலின் பிளானை கூட கணித்து வைத்திருப்பதாக ரசிகர்கள் இப்போது பாராட்டி வருகின்றனர்.

Trending News