வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அஜித்தை சொக்குப்பொடி போட்டு வைத்திருக்கும் விஷ்ணுவர்தன்.. மகிழ்திருமேனிக்கு கொடுத்த வாய்ப்பிற்கு இதான் காரணம்

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான துணிவு படம் மாஸ் ஹிட்டான நிலையில், தற்போது நடிகர் அஜித் நடிப்பில் அடுத்ததாக ஏகே62 படம் உருவாக இருந்தது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில், தற்போது அவர் இப்படத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு பதிலாக இயக்குனர்கள் விஷ்ணுவர்தன் அல்லது மகிழ்திருமேனி ஏகே62 படத்தை இயக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி உதயநிதி ஸ்டாலினின் சிபாரிசில் மகிழ்திருமேனி ஏகே62 கதையை அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திடம் கூறியதாகவும், இவரின் கதை அஜித்துக்கு பிடித்து போனதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் இப்படத்தில் இயக்குனர் மித்ரன் கதை எழுதுவார் என்றும் மகிழ்திருமேனி படத்தை இயக்குவார் என்றும் செய்திகள் உலா வந்தன.

Also Read: அஜித்துடன் இணைந்த விஜய் பட வில்லன்.. அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே62

இப்படி ஒருபுறம் மகிழ்திருமேனி பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசிய நிலையில், இயக்குனர் விஷ்ணுவர்தனால் தான் இவர் இப்படத்தில் இணைய உள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஷ்ணுவர்தன், அஜித் கூட்டணியில் பில்லா, பில்லா 2, ஆரம்பம் உள்ளிட்ட படங்கள் மாஸ் ஹிட்டானவை. மேலும் ரஜினியின் பாட்ஷா படத்தை ரீமேக் செய்யும் விதமாக பாட்ஷா2 படம் அஜித் நடிப்பில் உருவாக்க விஷ்ணுவர்தன் ஆயத்தமாகியிருந்தார்.

இந்நிலையில் ஏகே62 படம் பாட்ஷா2 படமாக உருவாகும் என அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச்.வினோத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதன்படி அஜித்தும், விஷ்ணுவர்தனிடம் தொலைப்பேசியில் பேசி இப்படத்தை இயக்கலாம் என முடிவு செய்தார். ஆனால் விஷ்ணுவர்தன் செய்த செயல் அஜித்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.

Also Read: ஆட்டத்தில் விக்னேஷ் சிவன் இருக்காரா இல்லையா.? மொத்தமா குழம்பிப் போயிருக்கும் கோடம்பாக்கம்

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஷேர்ஷா திரைப்படம் மெகா ஹிட்டான நிலையில், இவரது மார்க்கெட் சற்று கூடியுள்ளது. இதன் காரணமாக அஜித்தின் ஏகே62 படத்தை இயக்க வேண்டுமானால் தனது சம்பளத்தை நான்கு மடங்கு தயாரிப்பு நிறுவனித்திடம் விஷ்ணுவர்தன் உயர்த்திக் கேட்டுள்ளார். இதன் காரணமாக அஜித், என்னை மதிக்காமல் பணத்தின் மீது விஷ்ணுவர்தன் குறியாக இருப்பதாக கடுப்பானார்.

இதன் காரணமாக தான் மகிழ்திருமேனியிடம் ஏகே62 படத்தின் கதை கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. என்னதான் அஜித்தை, விஷ்ணுவர்தன் கடுப்பேற்றினாலும், அஜித்திற்காகவே பாட்ஷா 2 படத்தின் உரிமையை விஷ்ணுவர்தன் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வாங்கியிருந்தார். இந்நிலையில் மீண்டும் பாட்ஷா 2 படத்தின் பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: அஜித்திற்கு கதை சொன்ன பிரம்மாண்ட இயக்குனர்.. போட்டிக்கு வந்த சூப்பர் ஹிட் டைரக்டர்

Trending News