வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அர்ச்சனாவின் நிறத்தை விமர்சித்தாரா விசித்ரா.? குள்ளநரி புத்தியை காட்டிய மாயா

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்திருக்கும் நிலையில் மாயாவின் பல குள்ளநரி விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் மாயா, விசித்ரா மற்றும் அர்ச்சனா பற்றி பேசி இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில் அர்ச்சனாவுக்கு தன் நிறம் குறித்து காம்ப்ளக்ஸ் இருப்பதாக அவர் விஜய் வர்மாவிடம் கூறுகிறார். மேலும் விசித்ரா, அர்ச்சனா அம்மா வந்தபோது கவனித்து விட்டு அவரிடம் இருந்துதான் இந்த கலர் வந்திருப்பதாக மாயாவிடம் சொன்னாராம்.

இதைப் பற்றி கூறியிருக்கும் மாயா ஒருவரின் நிறத்தை பற்றி பேசுவது ரொம்ப தப்பு. இதில் நானும் அர்ச்சனாவின் நிறம் பற்றி பேசினேன் என விசித்ரா பொய் சொல்கிறார் என விஜய் வர்மாவிடம் கம்பளைண்ட் செய்து கொண்டிருந்தார். உண்மையில் நடந்த சம்பவமே வேறு.

Also read: பிக்பாஸ் டைட்டில் வாய்ப்பே இல்ல, வந்தவரை லாபம்.. சைலண்டா பணப்பெட்டியை தூக்கிய அதிமேதாவி

அர்ச்சனா இந்த நிறம் குறித்து பேசிய போது மாயா தான் அதை விசித்ராவிடம் கூறியிருக்கிறார். அதை தொடர்ந்து குடும்ப உறவுகள் வீட்டிற்கு வந்தபோது அர்ச்சனாவின் அம்மாவை விசித்ரா கவனித்திருக்கிறார். அதன் பிறகு மாயாவிடம் அம்மாவைப் போல் தான் அர்ச்சனாவும் இருப்பதாக கூறியிருக்கிறார்.

ஆனால் மாயா அதை அப்படியே மாற்றி விஜய் வர்மாவிடம் விசித்ராவை பற்றி தப்பும் தவறுமாக பேசி இருக்கிறார். இதைத்தான் இப்போது ரசிகர்கள் கிழி கிழி என கிழித்து வருகின்றனர். என்ன நடந்தாலும் இந்த மாயா மட்டும் திருந்தவே மாட்டார்.

இப்படி வீட்டில் இருப்பவர்களை பற்றி குறை சொல்லியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என ரசிகர்கள் அவரை ரோஸ்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே தினேஷ் பற்றி பேசியதில் விசித்ராவின் பெயர் டேமேஜ் ஆகி இருக்கிறது. இதில் மாயாவும் தன் பங்குக்கு பத்த வைத்திருக்கிறார்.

Also read: பிக் பாஸ் சீசன் 7ல் பணப்பெட்டியை தூக்கியது இவர் தான்.. மக்களை ஏமாற்றிய வெற்றி போட்டியாளர்

Trending News