இல்லத்தரசிகளுக்கு உற்ற தோழியாகவும் சிறந்த பொழுதுபோக்காகவும் அமைந்திருப்பது தொலைக்காட்சிகளில் வெளிவரும் சீரியல்கள் தான். அதிலும் ஆரம்பகாலத்தில் சின்னத்திரை என்றாலே சன்டிவி தான் அனைவரின் நினைவிற்கும் வரும்.
சன் தொலைக்காட்சிகளிலேயே அதிக அளவு தொடர்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அதைத் தொடர்ந்துதான் மற்ற தொலைக்காட்சிகளும் சீரியலை பிரதானமாக வெளிப்படுத்தினர். இவ்வாறு பல தொடர்கள் இருந்தாலும் ஒரு சில தொடர்கள் அதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ரசிகர்கள் மனதில் பதிந்து விடுவது வழக்கமான ஒன்று.
அந்த வகையில் 2002 இல் வெளிவந்து இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் தொடர்தான் “மெட்டிஒலி”. இத்தொடர் இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் முக்கியமான குடும்ப தொடராகும். மெட்டி ஒலி தலைப்பு பாடலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இன்றும் திருமண வீடுகளில் இந்த தொடரின் பாடல் நிச்சயம் இடம்பெறும்.
அந்த அளவிற்கு இத்தொடர் மக்களிடையே ஒன்றி உள்ளது. இதில் நடித்த எந்த ஒரு நடிகர்களையும் நாம் மறக்க இயலாது. அதில் செல்வம் கதாபாத்திரத்தில் வந்த விஸ்வநாதன் அனைவரின் வீட்டு செல்லப் பிள்ளையாகவே இருந்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.
மெட்டிஒலி தொடரை தொடர்ந்து அவர் சிறிது காலம் இடைவேளைக்குப்பின் பொன்னூஞ்சல் என்னும் தொடரில் நடித்தார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். இருப்பினும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு வெள்ளித்திரையில் கிடைக்கவில்லை. தற்போது ஒரு கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் சின்னத்திரையில் மக்கள் மனதை கொள்ளை கொண்ட ஆனால் வெள்ளித்திரையில் அந்த அளவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று விஸ்வநாதன் அவர்கள் தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.