சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்துடன் மோதப் போகும் அமீர் கான்.. எதற்கு தெரியுமா.?

பாலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் அமீர்கான். இவர் உலக அளவில் புகழ்பெற்ற செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் போட்டியில் மோத போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கோவிட் செக்மேட் என்ற பெயரில் வரும் 13-ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

அது மட்டும் இல்லாமல் யாரெல்லாம் விரும்புகிறார்களோ அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தங்களால் முடிந்த பண உதவியை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட பதிவில் ‘நீங்கள் காத்துக்கொண்டிருந்த தருணம் தற்போது நிகழப்போவது செஸ் விரும்பியான அமீர்கான், உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தும் ஒரு பிரண்ட்ஷிப் போட்டியில் மோத உள்ளனர்.

உங்களால் முடிந்த நன்கொடையை கொடுத்து இந்த நிகழ்ச்சியை வெற்றி பெற செய்யுங்கள்’ என்று ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த நிதியில் ஒரு தொகையை அடையும் போது வேறு பிரபலங்களின் பெயர்களை வெளியிட உள்ளனர். தற்போது அதை மறைமுகமாக வைத்துள்ளனர்.

chess-aamir-khan-vishwanathan
chess-aamir-khan-vishwanathan

நன்கொடை கொடுக்க இந்த லிங்க் கிளிக் செய்யவும்.

ஏற்கனவே விஸ்வநாதன் ஆனந்த் மற்றும்  அமீர்கான் செஸ் போட்டி விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News