தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள வலிமை படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அஜித் படம் என்றாலே தனி வரவேற்பு தான். ஒவ்வொரு முறையும் அஜித்தின் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பே தனிதான். அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
இயக்குனர் சிவா இயக்கியிருந்த இப்படத்தில் நயன்தாரா, அனிகா, தம்பி ராமையா, விவேக், யோகி பாபு, கோவை சரளா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.
இப்படத்தில் தந்தை மற்றும் மகளின் பாசத்தை உணர்த்தும் விதமாக கண்ணான கண்ணே என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இப்பாடலுக்காக டி.இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பாடல் மட்டுமின்றி இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற அடிச்சு தூக்கு பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அசத்தலான சாதனை படைத்துள்ளது. இதனை டி.இமான் மகிழ்ச்சியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். சமீபத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் முதல் பாடலான நாங்க வேற மாதிரி பாடல் வெளியாகி சாதனை படைத்தது. தற்போது விஸ்வாசம் படத்தின் பாடல் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளதால் இரட்டை சந்தோஷத்தில் உள்ளனர்.