வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஸ்வாசம் எப்படி ஜெயிச்சுது? சிவாவிடம் வெளிப்படையாகவே கேட்ட ரஜினி

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் அதிக கேலி கிண்டல்களுக்கு உள்ளான இயக்குனர் என்றால் அது சிவா தான். சிறுத்தை என்ற சூப்பர்ஹிட் படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து வீரம் வேதாளம் விவேகம் விசுவாசம் என அஜித்துடன் 4 படங்கள் செய்து தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக உயர்ந்தார்.

அதிலும் கடைசியாக சிவா மற்றும் அஜித் கூட்டணியில் வெளியான விசுவாசம் திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. மேலும் அஜித்தின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படம் ஆகவும் மாறிவிட்டது. இந்த படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு சிறுத்தை சிவாவுக்கு போன் போட்டோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக நமக்கு ஒரு படம் என கேட்டு வாங்கிய திரைப்படம்தான் அண்ணாத்த.

அண்ணாத்த படம் வெளியான முதல் நாளே ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. இதனால் அண்ணாத்த படம் முதல் நாளே படுதோல்வி என முத்திரை குத்தப்படும் நிலைமைக்கு வந்த நிலையில் குடும்ப ரசிகர்களின் ஆதரவை பெற்று தற்போது இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது. அதுவும் ஒரே வாரத்தில் 200 கோடி வசூல் என்று செய்தி வந்தது எல்லாம் ரஜினி ரசிகர்களை வேற லெவல் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் சமீபத்தில் சிறுத்தை சிவாவுடன் எப்படி சிவா படம் செய்ய சான்ஸ் கிடைத்தது என்பதை ரஜினிகாந்த் என்னுடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய ஹூட் செயலி மூலம் தெரிவித்துள்ளார். அதில் ரஜினிகாந்த் விசுவாசம் படத்தை ஆரம்பத்தில் பார்த்துவிட்டு வழக்கம் போலான கமர்சியல் படம் என நினைத்தாராம். ஆனால் படம் செல்லச்செல்ல அதனுடைய கதையம்சமும் செண்டிமெண்ட் காட்சிகளும் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாகவும் கிளைமாக்ஸ் காட்சியில் தன்னை அறியாமல் தானே எழுந்து நின்று கைதட்டியது தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அதன்பிறகு தனக்காக ஒரு படம் செய்யவேண்டும் என்று சொல்லியபோது அண்ணாத்த படத்தின் கதையைச் சொன்னார் எனவும் அந்த கதையை கேட்டதுமே முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் சார்ந்த கமர்சியல் திரைப்படம் என்பதை உணர்ந்து இந்த படம் நிச்சயம் பெண்களைக் கவரும் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

அதேபோல் என்னிடம் சிறுத்தை சிவா இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிபெறும் என சொன்னது போல் சொல்லி அடித்திருக்கிறார் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் சிறுத்தை சிவா ரஜினி கூட்டணியில் ஒரு படம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.

Trending News