இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு என பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அண்ணாத்த. இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
உண்மையை சொல்ல வேண்டுமானால் ரஜினி படம் என்ற ஒற்றை காரணத்தால் மட்டுமே இப்படம் மீதான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் டிரைலர் பார்க்கும் போது ஏற்கனவே பார்த்து பார்த்து சலித்து போன அதே பழைய கதையை தான் சிவா மீண்டும் ரஜினியை வைத்து எடுத்துள்ளார் என்று தோன்றுகிறது.
ரசிகர்களும் இதே மனநிலையில் தான் உள்ளார்கள் போல. சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தை போலவே அண்ணாத்த படத்தின் டிரைலர் இருப்பதாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒரு சில விஷயங்களை தவிர அப்படியே இரண்டு படங்களும் ஒத்துப்போவதாக கூறி வருகிறார்கள்.
அதன்படி விஸ்வாசம் படத்தில் அப்பா மகள் பாசம் என்றால், அண்ணாத்த படத்தில் அண்ணன் தங்கை பாசம். விஸ்வாசம் படத்தை போலவே அண்ணாத்த படத்திலும் ஒரே வில்லன், ஒரே நாயகி. இதைவிட முக்கியமான ஒன்று விஸ்வாசம் படம் எப்படி கிராமத்தில் தொடங்கி நகரத்தில் முடிகிறதோ அதேபோல் அண்ணாத்த படமும் உள்ளது. என்ன அதில் அஜித் மும்பை செல்வார் இதில் ரஜினி கல்கட்டா செல்வார் அவ்வளவு தான் வித்தியாசம்.

நன்றாக பார்த்தால் ஏற்கனவே சுட்ட தோசையை திருப்பி சுட்டுள்ளார் சிவா. இரண்டு படங்களுக்கும் இவ்வளவு ஒற்றுமை உள்ள நிலையில் எப்படி அண்ணாத்த படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடும் என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படம் தோல்வி அடைந்த நிலையில் அண்ணாத்த படமும் தோல்வி அடைந்தால் அவ்வளவு தான் என புலம்பி வருகிறார்கள்.
