திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

100 மில்லியனை தாண்டிய அஜித்தின் மிரட்டலான படம்.. இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் என்றால் அது அஜித் மட்டும் தான். இவரை ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைத்து வருகிறார்கள். இவரது படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே தனி வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் வலிமை படத்திற்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்கள் தவமிருந்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த சந்தோஷத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் இதே வேளையில் மற்றுமொரு சந்தோஷமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் புதிய சாதனையை படைத்துள்ளது. இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற படம் தான் விவேகம்.

இந்நிலையில் இப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டது. ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான ஒரு மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களை பெற்ற விவேகம் படம் தற்போது யூட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அடுத்தடுத்து மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறுவதால் தல ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

ajith-kumar-vivegam
ajith-kumar-vivegam

Trending News