செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விவேக்கின் சினிமா வளர்ச்சிக்கு நான்தான் காரணம்.. வெளிப்படையாக கூறிய பிரபலம்

பல்வேறு பிரபலங்களை பேட்டி காணும் யூடியூப் சேனல்களில் ஒன்று சினி உலகம். சமீபத்தில் இயக்குனர் தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களை கொண்டவர் வி.சேகர் அவர்கள்.

“வரவு எட்டனா செலவு பத்தனா” “காலம் மாறிப்போச்சு” உட்பட பல்வேறு வெற்றிப்படங்களை திரைக்கு கொண்டு சேர்த்தவர்.

இவர் நடிகர் விவேக் வடிவேலு செந்தில் கவுண்டமணி குறித்து பேசியிருந்தார். விவேக் தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்து பற்றியும் வடிவேலு கவுண்டமணி செந்தில் ஆகியோருடன் இவர் பணியாற்றியது குறித்தும் பல்வேறு விடயங்களை கலந்து கொண்டார் வி.சேகர்.

v sekar
v sekar

நாற்பது படங்கள் வரை நடித்திருந்த விவேக்கிற்கு ஊதியம் பெரிதாய் உயரவில்லை என்றும் விஜயுடன் அஜித்துடன் பல்வேறு படங்களில் மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்தாகவும் தான் படித்திருப்பதாகவும் வடிவேலுவுக்கு முன்பே திரைக்கு வந்துவிட்டதாகவும் கூறியிருந்திருக்கிறார்.

ஏற்கனவே வடிவேலுவுக்கு முக்கியதுவம் கொடுத்த விதத்தில் செந்தில் கவுண்டமணிக்கு கருத்து வேறுபாடு இருந்ததாகவும் குறிப்பிட்டார். இத்தனை முறை விவேக் முயற்ச்சியின் பிறகு “பொங்கலோ பொங்கல்” “விரலுக்கேத்த வீக்கம்” “ஒன்னா இருக்க கத்துக்கணும்” “நம்ம வீட்டு கல்யாணம்” உள்ளிட்ட படங்களில் வாய்ப்பளித்தார் இயக்குனர் வி.சேகர்.

அதன் பிறகு மார்க்கெட்டிலும் சரி திரையிலும் சரி விவேக்கிற்கு எல்லாவும் ஏறுமுகம் தான்

Trending News