விவேக் அஸ்தியை வைத்து குடும்பத்தினர் செய்த காரியம்.. மனம் நெகிழ்ந்த ரசிகர்கள்

vivek-cinemapettai
vivek-cinemapettai

நடிகர் விவேக்(vivek) சமீபத்தில் மாரடைப்பில் இறந்த செய்தி கேட்டு தமிழ்நாடே அதிர்ச்சியடைந்தது. அப்துல்கலாம் மறைவிற்கு பிறகு வாழும் அப்துல் கலாமாக அனைவராலும் பார்க்கப்பட்டவர்தான் நடிகர் விவேக்.

சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய நகைச்சுவைகளுக்கு சிரிக்க வேண்டும் அதே நேரத்தில் மக்கள் சிந்திக்கவும் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். அந்த வகையில் பல கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளார்.

அந்த வகையில் தற்போது கொரானா பரவால் அதிகமாக இருந்ததால் அதற்கான தடுப்பு ஊசியைப் போட்டுக்கொண்டு மக்களையும் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த நாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்றாலும் கடந்த சில வருடங்களாகவே விவேக் தன்னுடைய மகன் இறந்ததை நினைத்து மிகவும் வருத்தப்பட்டதாகவும் கூறி வருகின்றனர். அதேபோல் விவேக் தன்னுடைய வட்டாரங்களில் இருப்பவர்களை சினிமாவில் உயர்த்திவிட தவறியதில்லை.

இந்நிலையில் விவேக் இறந்த அவரது அஸ்தியை வைத்து குடும்பத்தினர் செய்த காரியம் அவரது ரசிகர்களை மனம் குளிர வைத்துள்ளது. விவேக்கின் அஸ்தியை மண்ணில் போட்டு அதில் பல மரக்கன்றுகளை நட்டு விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஒரு கோடி மரம் நடவேண்டும் என்ற தன்னுடைய வாழ்நாள் கனவை பாதியிலேயே விட்டுச் சென்றார். ஆனால் இளைஞர்கள் அதை கையில் எடுத்து தற்போது ஆங்காங்கே மரம் நட்டு வருகின்றனர்.

Advertisement Amazon Prime Banner