
நடிகர் விவேக்கை பலருக்கும் நடிகராக மட்டும் தான் தெரியும். ஆனால் அவருக்குள் ஒரு இயக்குனர் ஒளிந்து கொண்டிருந்தார் என்பது தற்போது வரை தெரியாமல் அவர் உடனே மறைந்து விட்டது.
சினிமாவுக்கு வந்த புதிதில் அவருக்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆசையாம். மேலும் அப்போது உச்சத்தில் இருந்த பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டு அடிக்கடி அவரை சந்தித்தாராம்.
ஆனால் அவர் விவேக்கின் சுறுசுறுப்பை பார்த்துவிட்டு அவர் இயக்கும் ஒவ்வொரு படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்து நடிப்பு ஆசையை தூண்டி விட்டாராம். விவேக் முதன் முதலில் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில்தான் நடித்தார்.
இருந்தாலும் விவேக்கிற்குள் இருந்த இயக்குனர் அவ்வப்போது வெளிவர ஒரு சூப்பர் டூப்பர் கமர்சியல் படத்திற்கான கதையை எழுதி வைத்து காத்துக் கொண்டிருந்தாராம். மேலும் அந்த படத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க பெரிதும் ஆசைப்பட்டாராம்.
விஜயகாந்தின் தீவிர ரசிகராக இருந்த விவேக் கடைசிவரை விஜயகாந்தை வைத்து ஒரு படம் இயக்க முடியாமல் போனது அவர் இறந்த பிறகு தான் வெளியில் தெரிய வந்துள்ளது. இந்த தகவலை பத்திரிக்கையாளர்களாக இருந்த வலைபேச்சு நண்பர்கள்தான் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் விவேக்கிற்கும் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையும் நீண்ட நாட்களாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் விவேக்கிற்கு கடைசி வரை நிறைவேறவில்லை.
