நடிகர் விவேக் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக இறந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் விவேக் கடைசியாக நடித்த சில படங்கள் பாதியில் நிற்பதால் பல தயாரிப்பு நிறுவனங்கள் பலத்த யோசனையில் உள்ளனர்.
அப்படி விவேக் நடிப்பில் உருவாகி வந்த மிகப் பெரிய படம்தான் இந்தியன் 2. ஷங்கர் மற்றும் லைகா கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வந்த இந்தியன் 2 படத்தில் மீண்டும் இந்தியன் தாத்தா வேடத்தில் நடித்து வருகிறார் கமல்.
அதுமட்டுமில்லாமல் இதுவரை விவேக் கமலஹாசனுடன் இணைந்து நடித்ததில்லை என்ற ஆசையை இந்த படத்தின் மூலம் நிறைவேற்றிக் கொண்டார். ஆனால் சில நாட்கள் படமாக்கப்பட்ட விவேக்கின் காட்சிகள் தற்போது அவர் இல்லாததால் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல முடியாமல் தட்டுத் தடுமாறி வருகிறது.
இதற்கு சங்கர் தன்னுடைய வட்டாரங்களில் ஒரு சிறந்த ஐடியா ஒன்றை கொடுத்துள்ளாராம். பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா மற்றும் விவேக் ஆகியோருக்கான காட்சிகள்தான் படத்தில் அதிகம் உள்ளதாம்.
இதன் காரணமாக விவேக் வெளியூருக்கு சென்று விட்டார் என்பது போல அவரது காட்சியை முடித்து விடலாம் என தன்னுடைய அசிஸ்டன்ட் டைரக்டர்களிடம் கூறியுள்ளாராம் சங்கர். இந்த தகவல் கசிந்து தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக உள்ளது.
விவேக்கிற்கு சீக்ரெட் போலீஸ் வேடம் தான் என்பதால் இது பொருத்தமாக இருக்கும் என கூற சங்கர் அதையே படமாக்கி விடலாம் என முடிவு செய்துவிட்டாராம். இருந்தாலும் கடைசி கட்டத்தில் ஏதாவது ஐடியா தோன்றினால் சங்கர் மாற்றவும் அதிக வாய்ப்பிருக்கிறது.