தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தை பார்த்த அனைவரும் ஆகா ஓகோ என புகழ்ந்து கொண்டிருக்கையில் நடிகர் விவேக் தன்னுடைய ஸ்டைலில் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் கலாய்த்து மீம்ஸ் போட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அசுரன் படத்திலிருந்து தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்று சுமாரான வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் அசுரன் அளவுக்கு தனுஷ் நடிப்பிற்கு தீனி போட ஒரு படமும் இல்லையே என ரசிகர்கள் ஏங்கினர்.
ஆனால் தற்போது தனுஷுக்கு அடுத்த தேசிய விருது கிடைக்கும் அளவுக்கு ஒரு படத்தை எடுத்துக் கொடுத்துள்ளார் மாரி செல்வராஜ். கர்ணன் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களும் கர்ணன் படத்தைப் பார்த்துவிட்டு தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் போற்றிப் புகழ்ந்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் படிக்காதவன் மற்றும் உத்தமபுத்திரன் போன்ற படங்களில் தனுஷுடன் நடித்த காமெடி நடிகர் விவேக் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு படிக்காதவன் ஸ்டைலில் மீம்ஸ் போட்டு படத்தை ஜாலியாக கலாய்த்துள்ளார்.
படிக்காதவன் படத்தில் தனுஷிடம் பேசிய வசனமான, எப்பவாவது வித்தவுட்டுணா ஓகே, எப்பவுமே வித்தவுட்னா எப்படி என்ற வசனத்தை மாற்றி, கர்ணன் படத்திற்கு, எப்பவாச்சும் ஹிட்டுக்கொடுத்தா ஓகே, எப்பவுமே கொடுத்தா எப்படி ப்ரோ? என பதிவிட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
![vivek-meme-about-dhanush-in -karnan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/04/vivek-meme-about-dhanush-in-karnan.jpg)