இந்த இரண்டு காரணங்களுக்காக தான் விவேக் தடுப்பு ஊசி போட்டார்.. பகிர் கிளப்பிய பிரபலம்

vivek-cinemapettai
vivek-cinemapettai

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் காமெடி நடிகராக வலம் வந்த விவேக் கடந்த மாதம் கொரானா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்த நாளே மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார் என்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அதற்கு பலரும் விவேக் போட்டுக்கொண்ட தடுப்பூசி தான் காரணம் என தற்போது வரை பேசி வருகின்றனர். ஆனால் போனவர் போனவர்தானே. இன்னும் விவேக் மறைவை ஏற்றுக்கொள்ள ரசிகர்கள் மறுக்கின்றனர்.

அந்தளவுக்கு தன்னுடைய காமெடிகள் மூலம் மக்கள் மனதில் நிறைந்துள்ளார். அப்படிப்பட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற சிறு நப்பாசை காரணமாக தான் அவசரப்பட்டு விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக பிரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

விவேக் தடுப்பூசி போட்டதற்கு காரணமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தடுப்பூசி நல்லதா, கெட்டதா என மக்கள் யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது பயத்தைப் போக்கவும் தான் அவர் ஊசி போட்டுக் கொண்டார் என்கிறார் நடிகர் வையாபுரி.

விவேக் மற்றும் வையாபுரி இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி உள்ளனர். அதுமட்டுமில்லாமல் நீண்ட நாட்களாக இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

தற்போது கொரானா காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் வேளையில் அதை பற்றி விழிப்புணர்வு இல்லாமல் சிலர் இருக்கிறார்கள் என்பதுதான் ஆதங்கத்தை கொடுக்கிறது.

vivek-cinemapettai-01
vivek-cinemapettai-01
Advertisement Amazon Prime Banner