சின்ன கலைவாணர் விவேக் திடீரென மாரடைப்பால் இறைவனிடம் சென்றது ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையை கொடுத்துள்ளது. ஆனால் விவேக்கின் வாழ்நாள் குறிக்கோளாக ஒரு கோடி மரம் நடவேண்டும் என்பதை பல இளைஞர்களும் தொடர ஆரம்பித்துள்ளனர்.
இதுவே ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றி தானே. விவேக் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வகுத்து பிரபல காமெடி நடிகராக உயர்ந்தவர். அந்த வகையில் பல சமூக கருத்துக்களை தன்னுடைய காமெடி வாயிலாக ஈஸியாக மக்கள் மனதில் நுழைத்து விடுவார்.
விவேக் திடீரென இறந்தது அனைவருக்குமே அதிர்ச்சி தான். இந்நிலையில் விவேக் நடிப்பில் அடுத்தடுத்து என்னென்ன படங்கள் திரைக்கு வர உள்ளது என்பதை பார்ப்போம்.
விவேக் சினிமாவுக்கு வந்து இத்தனை வருடத்தில் இதுவரை கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததே இல்லை. ஆனால் இந்தியன் 2 படத்தில் இருவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்த நடித்து வந்தனர். ஆனால் அந்த படம் நிறுத்தப்பட்டதால் தற்போது அந்தப் படத்தில் விவேக் நடித்த காட்சிகளை என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அடுத்தது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் என்பவர் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படத்திலும் காமெடி நடிகராக நடித்து வருகிறார். கடைசியாக விவேக் பனிப் பிரதேசத்தில் சரவணன் அருள் படப்பிடிப்பில் இருந்து பல வீடியோக்களை வெளியிட்டார். அந்தப்படமும் அடுத்ததாக வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. மேலும் பெயரிடப்படாத சில படங்களிலும் விவேக் நடித்துள்ளாராம். எப்போதுமே விவேக்கின் காமெடிகளுக்கு விழுந்து விழுந்து சிரித்து ரசிக்கும் ரசிகர்கள் இந்த முறையை திரையரங்குகளில் என்ன செய்யப் போகிறார்களோ?