திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கெட்ட எண்ணத்தோடு தூபம் போட்ட வடிவேலு.. ஒரே வார்த்தையால் வாயை மூட செய்த விவேக்

எத்தனையோ காமெடி ஜாம்பவான்கள் நம் மனதை கவர்ந்திருந்தாலும் வடிவேலு மற்றும் விவேக்கிற்கு ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடமே இருக்கிறது. அதில் வடிவேலுவின் காமெடி வேறு ஒரு ட்ராக்கில் இருக்கும். அதே போன்று விவேக்கின் காமெடி சமூக சிந்தனை கொண்ட ஒரு வழியில் பயணிக்கும். இதுவே இவர்களுக்கான வெற்றியாக அமைந்தது.

ஆனால் விவேக் அளவிற்கு வடிவேலு கிடையாது என சொல்லும் வகையில் பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. ஏனென்றால் விவேக் தான் வளர்வது மட்டுமல்லாமல் தன்னுடன் இருப்பவர்கள் கூட சாதிக்க வேண்டும் என நினைப்பவர். வேறு படங்கள் வந்தாலும் அவர்களை சந்தோஷமாக அனுப்பி வைப்பார். ஆனால் வடிவேலு தனக்கு அடிமையாக ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என நினைப்பார்.

Also read: அஜித்துக்கு சிபாரிசு செய்த விவேக்.. லைஃப் டைம் படமாக ஏகே கொடுத்த பிளாக்பஸ்டர் 

இது குறித்த குற்றச்சாட்டை அவரால் பாதிக்கப்பட்ட பலரும் இப்போது முன் வைத்திருக்கின்றனர். அந்த வகையில் விவேக் உடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த நடிகர் கொட்டாச்சி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து இருக்கிறார். அதாவது ஒருமுறை வடிவேலு, விவேக்குக்கு போன் செய்து கொட்டாட்சியை எதற்கு நீ வளர்த்து விடுகிறாய். அவனவன் கஷ்டப்பட்டு முன்னேறட்டும் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு விவேக் சினிமாவை பொறுத்தவரை எப்ப வாய்ப்பு வரும், வராது என்று சொல்ல முடியாது. அது நம்ம கையில் கிடையாது. அதனால நம்ம பண்றத பண்ணுவோம் என்று கூறி வடிவேலுவின் வாயை அடைத்திருக்கிறார். அந்த வகையில் கெட்ட எண்ணத்தோடு தூபம் போட்ட வடிவேலுக்கு நோஸ் கட் தான் கிடைத்திருக்கிறது.

Also read: குணச்சித்திர கேரக்டரில் நடித்து வெற்றி கண்ட விவேக்கின் 6 படங்கள்.. தனுஷை வெளுத்து வாங்கிய ஏகாம்பரம்

இந்த விஷயத்தை இப்போது கொட்டாச்சி வெளிப்படையாக கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் வடிவேலு தன்னிடம் இவ்வாறு பேசியதை விவேக்கே அவரிடம் கூறினாராம். அந்த வகையில் இப்படி ஒரு எண்ணத்துடன் இருக்கும் வடிவேலுவை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. அவருடைய கெட்ட எண்ணத்திற்கு அவர் வீணாக போவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனென்றால் நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் மீண்டும் அவர் தன் சேட்டையை ஆரம்பித்துள்ளதாக கூட சில புகார்கள் எழுந்துள்ளது. மேலும் இப்போது அவர் நடிக்கும் படங்களில் பழைய துள்ளல் இல்லை எனவும் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கொட்டாச்சி கூறிய செய்தியும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also read: காமெடி இல்லாமல் ஹீரோவாக விவேக் நிரூபித்த 5 படங்கள்.. சீரியசான கேரக்டரில் நடித்த ஒரே படம்

Trending News