வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடுத்தவர்களுக்கு உதவுவதில் வடிவேலுவை ஓரம் கட்டிய விவேக்.. 1000 ரூபாய்க்காக இறங்கி சண்டை போட்ட சம்பவம்

சினிமாவில் எம்ஜிஆர் தொடங்கி விஜயகாந்த் என பல பிரபலங்கள் தங்களிடம் உதவி என்று கேட்டால் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அப்படி வடிவேலுவும் தன்னை நாடி வருபவர்களுக்கு ஏதாவது வாய்ப்பு கொடுத்து உதவுவாராம். ஆனால் அவரையே சில விஷயங்களில் ஓவர் டேக் செய்துள்ளார் சின்ன கலைவாணர் விவேக்.

இன்று இந்த மண்ணுலகில் விவேக் நம்முடன் இல்லை என்றாலும் அவரது நகைச்சுவையால் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். பல முன்னணி நடிகர்களின் படங்களில் விவேக் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இறந்ததற்குப் பிறகு அவரது நடிப்பில் வெளியான படம் அண்ணாச்சியின் தி லெஜன்ட் படம்.

Also Read : வடிவேலு, விவேக் படங்களில் நடித்த காமெடி நடிகர்.. திடீர் மறைவால் அதிர்ச்சியில் உறைந்த கோலிவுட்

இந்நிலையில் விவேக் எந்த விஷயமாக இருந்தாலும் மனசாட்சியோடு நடந்து கொள்ளக் கூடியவராம். அந்த வகையில் சக நடிகர்களின் குழந்தைகளுக்கு படிப்பு செலவு பார்த்துக் கொள்வது, வீட்டு கஷ்டத்தை போக்குவது, மற்ற நடிகர்களையும் ஊக்குவிப்பது, சலுகை கிடைக்க வைப்பது என அனைத்தையுமே பார்த்துக் கொள்வாராம்.

இப்படி இருக்கும் விவேக் ஒருமுறை காதல் சடுகுடு படத்தில் தன்னுடன் நடித்த காமெடி நடிகர்களுக்கு படக்குழு சம்பளம் கொடுக்க வில்லையாம். அந்த நடிகர்களுக்கு அப்போது ஆயிரம் ரூபாய் தான் சம்பளமாம். அதைக் கூட கொடுக்காமல் படகுழுவினர் இழுத்தடித்து வந்துள்ளனர்.

Also Read : விவேக்கை அவமானப்படுத்திய 2 ஹீரோக்கள்.. நான் இருக்கிறேன் என்று துணையாய் நின்ற குழந்தைகுணம் நடிகர்

இந்த விஷயம் விவேக்கின் கவனத்திற்கு சென்றுள்ளது. உடனே அவர்களுக்கு கொடுப்பது ஆயிரம் ரூபாய் தான், அதையும் உடனே கொடுக்காமல் ஏன் இப்படி இழுத்து அடிக்கிறீர்கள் என அவர்களிடம் இறங்கி சண்டை போட்டாராம். அதன் பின்பு தான் சக நடிகர்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் கிடைத்ததாம்.

இந்த நிகழ்வை சமீபத்திய பேட்டி ஒன்றில் காமெடி நடிகர் முத்துக்காளை பகிர்ந்து கொண்டார். இவ்வாறு விவேக் வெளியில் தெரியாமல் பலருக்கு உதவி செய்துள்ளார். அதுமட்டும்இன்றி அப்துல்கலாம் வழியில் இயற்கையை பாதுகாக்கவும் பல விஷயங்களை செய்துள்ளார்.

Also Read : விவேக் இறந்த பின் வாய்ப்பை இழந்த செல்முருகன்.. கேவி ஆனந்த் மறைவுக்குப் பிறகு காணாமல் போன நடிகர்

Trending News