கமலுடன் கடைசிவரை நடிக்காத விவேக்..

kamal-vivek
kamal-vivek

தமிழ் சினிமாவில் காமெடி காட்சிகளில் கருத்து சொல்லி ரசிகர்களை ரசிக்க வைப்பதில் சின்ன கலைவாணர் விவேக் தனி ரகம். ஆனால் சினிமாவுக்கு வந்த இந்த 33 வருடத்தில் கமல்ஹாசனுடன் ஒரு படம் கூட நடிக்கவில்லை.

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கிய விவேக் கமலஹாசனுடன் மட்டும் நடிக்கவில்லை. சில படங்கள் வாய்ப்பு வந்தும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக கைவிட்டு சென்றதாக தகவல்.

இந்நிலையில் கடைசியாக இந்தியன் 2 படத்தில் விவேக் ஒப்பந்தமாகி நடித்து வந்ததாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் இந்தியன் 2 படம் வருமா? வராதா? என்ற இழுபறியில் தவித்துக் கொண்டிருக்கிறது.

ஒருவேளை விவேக் கருத்து காமெடியனாக இருந்ததால் கமல்ஹாசன் ஒதுக்கி விட்டாரோ என்ற கேள்வியும் வந்தது. கமலஹாசன் நினைத்திருந்தால் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுத்தது போல விவேக்கிற்கு கொடுத்திருக்கலாம்.

vivek
vivek

ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் விவேக்கிற்கு கடைசிவரை கமல் படத்தில் நடிக்க வாய்ப்பில்லாமலே போய்விட்டது. இத்தனைக்கும் கமலின் ஆஸ்தான குருவான கே பாலச்சந்தரின் விருப்பமான பிரபலங்களில் விவேக் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக் மரணம் பெரும் அதிர்ச்சியைத்தான் அளிக்கிறது.

Advertisement Amazon Prime Banner