
Actor Vivek : சின்ன கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்திலே நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சினிமா துறையின் பேரிழப்பாக இவரதும் மரணம் இருந்தது. இவருக்கு தேஜசுவினி, அமிர்தா நந்தினி மற்றும் பிரசன்னகுமார் என்ற மூன்று குழந்தைகள். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2015 ஆம் தேதி பிரசன்னா உயிரிழந்தார்.
இந்நிலையில் விவேக்கின் மகள் தேஜசுவினி பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் விவேக் வாழ்ந்த வீட்டிலேயே மிகவும் எளிமையாக நடந்துள்ளது.
அப்துல் கலாமின் கொள்கையை பின்பற்றிய விவேக்
இதில் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். விவேகானந்தர் மற்றும் அப்துல் கலாம் ஆகியோரின் கொள்கைகளை பின்பற்றக் கூடியவர் விவேக்.
அந்த வகையில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதை லட்சியமாக கொண்டிருந்தார். இப்போது அப்பாவின் வழியில் விவேக்கின் மகளும் திருமணம் முடிந்த கையோடு கணவருடன் மரக்கன்று நட்டு உள்ளார்.
அந்தப் புகைப்படம் இப்பொழுது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. விவேக் இல்லாமல் அவரது மகளின் திருமணம் நடப்பது பாரமாக உள்ளது. ஆனாலும் அவரது கொள்கையை விவேக் மகளும் பின் தொடர்ந்தவருகிறார். இப்போது மணமக்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
திருமணம் முடிந்த கையுடன் மரக்கன்று நட்ட விவேக்கின் மகள்
