விஜய் டிவி, ஜீ தமிழ், புதுயுகம் பிரபல சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் வி ஜே ஆனந்தி. அதன் பிறகு இவர் ஸ்ரீலங்கா சேனலில் கார்த்திகை பெண்கள் எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் நாயகியாக அறிமுகமானார்.
பிறகு தொடர்ந்து விஜய் டிவியில் கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம், கனா காணும் காலங்கள் போன்ற சீரியல்களில் நடித்து நன்கு பிரபலம் அடைந்தார். நடன நிகழ்ச்சியான மானாட மயிலாட சீசன் 7 மற்றும் ஜோடி நம்பர் 1 சீசன் 6 ஆகிய நடனப் போட்டியில் பங்கேற்றார்.
தொடர்ந்து விஜேவாகவும், சின்னத்திரை நடிகையாகவும் நடித்து வந்த ஆனந்திக்கு ரௌத்திரம் என்ற படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமானார்.
அதன்பிறகு இவர் டமால் டுமீல், மீகாமன், பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கருப்பு சேலை அணிந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் அட நம்ம ஆனந்தி இவங்க தாரை தப்பட்டை படத்தில் கிராமத்து பெண்ணாக இருந்தாங்க, இப்ப மாடல் பெண்ணாக மாறி உள்ளார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இந்த சேலையில் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்றும் ஐ லவ் யூ, மிஸ் யூ செல்லம் போன்ற கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.