சன் மியூசிக் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா. அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை அஞ்சனாவும் சகோதரிகள் போலவே இருப்பார்கள். ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்த அஞ்சனா நடிகர் கயல் சந்திரனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
திருமணம், குழந்தை என சில காலம் ஓய்வில் இருந்த அஞ்சனா தற்போது மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார். புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
திருமணமாகி குழந்தை பெற்று இருந்தாலும், உடற்பயிற்சி மூலம் தனது உடல் அழகை பேணி காக்கும் அஞ்சனா, விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது குட்டை பாவாடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வயதானாலும் இளமை குறையாமல் இருக்கிறார் எனக் கூறி வருகின்றனர். மேலும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
