ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சிவகார்த்திகேயனுக்கு அஞ்சனா போட்ட அந்த ட்வீட்.. பங்கம் செய்யும் நெட்டிசன்கள்

சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகம் ஆனவர் வீ ஜே அஞ்சனா. கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அவர் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருகிறார். அவருக்கு முன்னணி நடிகைகளுக்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அவர் கயல் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. சில காலங்கள் மீடியாவை விட்டு ஒதுங்கியிருந்த அஞ்சனா தற்போது பல சேனல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அஞ்சனா தன்னுடைய அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது வழக்கம் அதே போன்று பிரபலங்கள் பற்றிய சில கருத்துக்களையும் அவர் ஷேர் செய்து வருவார்.

அந்த வகையில் அஞ்சனா தற்போது ஷேர் செய்த ஒரு ட்வீட் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கு வீ ஜே அஞ்சனா நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக விராட் கோலியின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் என்ன ஆச்சு உங்களுக்கு, இதை கூட சரியாக உங்களால் செய்ய முடியாதா, போதையில் இருக்கிறீர்களா என்று கண்டபடி கலாய்த்து வந்தனர். இதனால் அஞ்சனா அந்த ட்வீட்டை டெலிட் செய்து வேறு ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது வேலைக்கு நடுவில் மாற்றி இப்படி ஒரு ட்வீட் போட்டு விட்டேன், அதற்காக இப்படியா கலாய்ப்பது. ஆனால் ஒன்று அனைவரும் ஒரே நினைப்பில் தான் இருக்கிறீர்கள் என்று நல்லாவே தெரியுது என்று அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் அவர் சிவகார்த்திகேயனுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார். இதற்கு சிவகார்த்திகேயனும் நன்றி கூறி பதில் ட்வீட் போட்டுள்ளார். டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன், கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க உள்ளது அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending News