சன் மியூசிக்கில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் விஜே அஞ்சனா. இதைத்தொடர்ந்து மாடல் அழகியாகவும் வலம் வந்த நிலையில் கயல் படத்தின் கதாநாயகன் சந்திரன் என்பவரை அஞ்சனா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இதனால் இப்போது அஞ்சனா சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி உள்ளார். இந்நிலையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சமீபகாலமாக அஞ்சனா மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குழந்தை பெற்ற பிறகும் வசீகர அழகுடன் இருக்கிறார் அஞ்சனா. அதுமட்டுமல்லாமல் வயதாக ஆக மெருகேறி இளமையாக காட்சி அளிக்கிறார். அது மட்டுமல்லாமல்தற்போது அஞ்சனாவிற்கு 32 வயது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா. அந்த அளவுக்கு உடற்பயிற்சி மூலம் உடம்பை இளமையாக வைத்துக்கொள்கிறார்.

