புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

வைரமுத்து மோசமான ஆளு பார்த்து பழகணும்.. எச்சரித்த சின்மயிக்கு பதிலடி கொடுத்த VJ அர்ச்சனா

வைரமுத்துக்கும் பாடகி சின்மயிக்கும் இருக்கும் தகராறு அனைவருக்குமே தெரியும். மீ டூ என்ற விவகாரம் மிகப்பெரும் பரபரப்பை கிளப்பி இருந்த சமயத்தில் சின்மயி வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தார் என்று கூறி ஒட்டுமொத்த திரையுலகையுமே அதிர வைத்தார். அதிலிருந்தே அவர் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகிறார்.

பாடும் வாய்ப்புகள் மறுக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவரே கூட வெளிப்படையாக கூறினார். இந்நிலையில் அவர் மீண்டும் வைரமுத்துவை சீண்டும் விதத்தில் ஒரு கமெண்ட் தெரிவித்து இருக்கிறார். அதாவது விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் விஜே அர்ச்சனா. தற்போது அந்த சீரியலை விட்டு விலகி இருக்கும் அவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

Also read: வைரமுத்துவின் வரிகளால் விதவையான பிரபல பாடகி.. இன்று வரை மனம் நொந்துபோன சம்பவம்

அந்த வகையில் அவர் சமீபத்தில் கவிஞர் வைரமுத்துவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். அதை தன்னுடைய சோசியல் மீடியாவில் வெளியிட்ட அவரை சின்மயி ஒரு கமெண்ட் மூலம் எச்சரித்து இருந்தார். அதாவது அவர் வெளியிட்ட போட்டோவில் வைரமுத்து அவர் தலையின் மீது கை வைத்து ஆசீர்வதிப்பது போல் இருந்தது. அதைப் பார்த்த சின்மையி ஆரம்பத்தில் இது போல் தான் அனைத்தும் இருக்கும்.

அவரிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள், யாரையாவது துணைக்கு வைத்துக் கொண்டு அவரிடம் பேசுங்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பாசிட்டிவ், நெகட்டிவ் கமெண்ட்கள் வந்திருந்தது. அதன் பிறகு அர்ச்சனா அந்த கமெண்ட்டை நீக்கிவிட்டார். ஆனாலும் பலர் அந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைரல் செய்து வந்தனர். மேலும் அர்ச்சனாவிடமும் இது குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.

Also read: மணிரத்தினத்தை வைத்து காய் நகர்த்திய சுஹாசினி.. வைரமுத்துவின் கேரியர் சோலி முடிஞ்சிருச்சு

அதற்கு விளக்கம் அளிக்காமல் இருந்த அர்ச்சனா தற்போது சின்மயிக்கு ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது, என் அப்பா ஒரு தமிழ் ஆசிரியர் என் வீட்டில் எல்லோருக்கும் வைரமுத்து சாரை ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் நான் படப்பிடிப்பில் இருந்த பொழுது அவரை சந்திக்க நேர்ந்தது. அதனால் நான் அவரிடம் எப்படி இருக்கீங்க சார், நான் உங்கள் ரசிகை என்று பேசினேன் அவ்வளவுதான். மற்றபடி சின்மயியை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது.

சிலர் இதுபோன்று ஏதாவது பேசத்தான் செய்வார்கள். ஊர் வாயை நம்மால் அடைக்க முடியாது, நான் அவருடைய தீவிர ரசிகை என்பதால் போட்டோ எடுத்துக் கொண்டேன் அவ்வளவுதான். இதை புரியாதவர்கள் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும் என்று கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதில் தேவை இல்லாமல் பரபரப்பை கிளப்பும் சின்மயிக்கான சரியான பதிலடி என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

Also read: வாலியின் பாடலை தூக்கி எறிந்த எம்ஜிஆர்.. விஷயத்தை போட்டுடைத்த வைரமுத்து

Trending News