செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பூதாகரமாக வெடிக்கும் சித்ராவின் மரணம்.. அரசியல் புள்ளிகளால் திசைமாறும் தற்கொலை வழக்கு

கடந்த சில நாட்களாகவே மறைந்த விஜே சித்ரா குறித்த பல தகவல்கள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் அவரின் கணவர் சித்ராவின் மரணத்தில் சம்பந்தப்பட்டவர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் நாயகியாக வலம் வந்த சித்ராவின் மரணம் நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆனாலும் அவருடைய மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. இவ்வளவு காலங்களாக அடங்கிப் போய் இருந்த இந்த வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது.

சித்ராவின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருடைய கணவர் ஹேம்நாத் தற்போது ஜாமினில் வெளி வந்துள்ளார். வெளியே வந்திருக்கும் அவர் சித்ராவின் மரணத்தில் என்ன நடந்தது என்ற விஷயங்களை பற்றி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார்.

அதில் சித்ராவுக்கு அரசியல்வாதிகளால் தொல்லை ஏற்பட்டதாகவும், அவரின் மரணத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறிவருகிறார். மேலும் சம்பவ தினத்தன்று சித்ரா இந்த பிரச்சனையால் தான் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதுவே அவரை தற்கொலை செய்யத் தூண்டியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும் இந்த தகவல் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. ஏனென்றால் சித்ராவின் மரணம் நிகழ்ந்த அன்று அவர் கூறிய செய்தியே வேறு. அப்போது அவருடைய நண்பரிடம் அவர் பேசும் ஆடியோ கூட வெளியாகி இருந்தது. அதில் சித்ரா, தொலைக்காட்சி நடிகருடன் சேர்ந்து ஆடியதால் தனக்கு வருத்தம் என்று தான் கூறி இருந்தார்.

அப்படியிருக்கும் போது அவர் இப்போது அதை மாற்றி வேறு மாதிரி பேசி வருகிறார். அதனால் அவர் மீது உள்ள சந்தேகம் வலுப்பதாக சித்ராவின் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் சித்ராவின் மரணத்தில் ஆரம்பத்தில் இருந்தே பல விதமான தகவல்களை பகிர்ந்து வரும் நடிகை ரேகா நாயர் தற்போது ஹேம்நாத்துக்கு எதிரான கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.

அதில் சித்ராவின் தற்கொலைக்கு இரண்டு பேருக்கு தொடர்பு உள்ளது. அவரின் இந்த முடிவுக்கு ஹேம் நாத்தின் சித்திரவதையும், தொந்தரவும் தான் காரணம். அவனுக்குப்பின்னால் இன்னும் சில பெரும்புள்ளிகள் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் யார் என்பதை தெரிவிக்க ரேகா நாயர் மறுத்துள்ளார்.

அதனால் சித்ராவின் ரசிகர்கள் அவரை சரமாரியாக சாடி வருகின்றனர். உங்களுக்கு அவ்வளவு தைரியம் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களின் பெயரை கூற வேண்டியது தானே. அதை விட்டு விட்டு சித்ராவின் பெயரைக் கெடுப்பதற்கு ஏன் இது போன்று பேசுகிறீர்கள் என்று அவருக்கு எதிராக பேசி வருகின்றனர்.

உண்மையில் சித்ராவின் தற்கொலை வழக்கு தற்போது இது போன்று சிலரின் சதி வேலைகளால் திசை திரும்பியுள்ளது. சம்பவம் நடந்து இத்தனை மாதங்கள் கழித்து இப்போது சித்ராவை பற்றி பல அவதூறு விஷயங்களைப் பேசுவதற்கு பின்னால் நிச்சயம் ஏதோ ஒன்று இருக்கிறது.

இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவே சிலர் சித்ராவை அசிங்கப்படுத்தும் வேலையில் இறங்கி இருப்பதாகவும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும் இவ்வளவு அமளி துமளிகளுக்கு நடுவில் சித்ராவின் பெற்றோர்கள் மௌனம் காத்து வருவதற்கான காரணம் என்ன என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

Trending News