ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

இரண்டாவது திருமணம் பற்றி மனம் திறந்த மகேஸ்வரி.. கண்ணீருடன் சொன்ன பதில்

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி இன்று பல சின்னத்திரை சேனல்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் விஜே மகேஸ்வரி. சில வருடங்களுக்கு முன் இவர் திருமணம் செய்து கொண்டு மீடியாவில் இருந்து விலகி இருந்தார்.

பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மகேஸ்வரி மீண்டும் ஜீ தமிழ் மூலம் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஒரு சில சின்னத்திரை சீரியல்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது மகேஸ்வரி விக்ரம், மகான், சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதில் கமல் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். தன்னுடைய கதாபாத்திரத்தை பற்றி அவர் மிகவும் சஸ்பென்ஸாக வைத்துள்ளார். மேலும் விவாகரத்து பெற்று ஒரு குழந்தையுடன் வாழ்ந்துவரும் மகேஸ்வரி ஒரு பேட்டியில் தன்னுடைய திருமண வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, என்னுடைய முதல் திருமணம் சில காரணங்களால் விவாகரத்து வரை சென்றது. பிறகு நான் இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. எனக்கு யார் மேலயும் நம்பிக்கை வர மாட்டேங்குது, என்னோட பையன், என்னோட அம்மா, என்னுடைய வேலை இதில் மட்டும்தான் நான் தற்போது கவனம் செலுத்தி வருகிறேன்.

என்னை புரிந்து கொண்டு, என்னுடைய பையனையும் ஏத்துக்கிற மாதிரி ஒரு துணையை என்னால தேர்ந்தெடுக்க முடியவில்லை. இதனால் இரண்டாவது திருமண வாழ்க்கை சரியாக இருக்குமா என்ற பயம் எனக்குள் இருக்கிறது. என் அம்மாவைப் போலவே நானும் சிங்கிள் மதராக இருக்கிறேன் என்று மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.

தன்னைப் பற்றி பல நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும், நான் தொடர்ந்து தைரியமாக வாழ்ந்து காட்டுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் கணவர் இல்லாமல் தனியாக ஒரு குழந்தையை வளர்ப்பது ரொம்ப கஷ்டம் என்று அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

Trending News