செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

விஜய் டிவி கழட்டிவிட்டதால் லோன் கட்ட முடியாமல் லோல்படும் நடிகை.. பாலாவை பார்த்து கத்துக்கோங்க

vj manimekalai told that current situation and is struggling to pay a home loan: சன் மியூசிக்கில் துறுதுறுவென ரசிகர்களை கலாய்த்து நிகழ்ச்சி நடத்தி வந்தவர் மணிமேகலை அவர்கள். சன் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தவர் திடீரென விஜய் டிவியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஷோவில் பங்கேற்பதற்காக சன் நெட்வொர்க்கில் இருந்து விலகி விஜய் டிவிக்கு வந்தார்.

தன் கணவர் ஹுசைன்னை, இருவிட்டார் சம்மதம் இன்றி காதலித்து கரம் பிடித்ததால் விஜய் டிவியின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ஷோவில் அவர்களுக்கு மீண்டும் திருமணம் செய்து வைத்தனர். மேலும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையில் பண்ணிய அழிச்சாட்டியங்களால் இவருக்கு டிஆர்பி யில் உச்சத்தில் போய்க்கொண்டிருந்த ஜாலியான நிகழ்ச்சி குக் வித் கோமாளியில் கோமாளியாக வாய்ப்பு கிட்டியது.

தனது வேடிக்கையான பேச்சின் மூலம் தொடர்ந்து 4  சீசன் களில் வெற்றிகரமாக வலம் வந்த மணிமேகலை அவர்கள் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று தனது திறமையை நிரூபித்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடிக்க மணிமேகலைக்கு வாய்ப்பு வந்தது. தொடர்ந்து நான் ஆங்கர் ஆகவே இருப்பேன் என்று அந்த வாய்ப்பை நிராகரித்தார் மணிமேகலை.

Also read: விஜய் டிவி நடிகையை தட்டி தூக்கிய சன் டிவி.. அனல் பறக்க போகும் டிஆர்பி

அதை தொடர்ந்து பிரபலங்களின் பேட்டிகள், படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சிகள், ஆடியோ வெளியீடு, கல்லூரி கலாச்சார நிகழ்ச்சிகள், விருது வழங்கும் நிகழ்ச்சிகள் என பலவற்றையும் தொகுத்து வந்த மணிமேகலை விஜய் டிவியின் பிசியான விஜே வானார்.

இது தவிர தனியாக ஹுசைன் மணிமேகலை என்ற யுடியூப் சேனலையும் ஆரம்பித்தவர் தான் அடிக்கடி எடுக்கும் வீடியோக்களையும் அட்ராசிட்டிகளையும் பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வந்தார். வாழ்க்கை இவ்வாறு சந்தோஷமாக போய்க் கொண்டிருக்க திடீரென விஜய் டிவி குக் வித் கோமாளி  சீசன் நிறைவை ஒட்டி மணிமேகலையை கழட்டி விட்டது.

மேலும் அம்மணிக்கு சரக்கு காலி, இவருடன் இணைந்து பயணித்த பாலா, புகழ் போன்றோர் புகழின் உச்சாணிக்கு செல்ல மணிமேகலையோ புதுமையாக எதுவும் செய்யாமல் வாய்ப்பின்றி தவித்து வருகிறார். பாலா சோசியல் சர்வீஸ் ஏதோ செய்து எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.புகழும் படங்களில் கமிட் ஆகி  நடித்து வருகின்றார்.

ஏதாவது செஞ்சுட்டே இருந்தா மட்டும் தான் இந்த உலகம் நம்மளை ஞாபகம் வைத்துக்கொள்கிறது. இவர் நடித்த ஒன்று, இரண்டு படங்கள் கூட சரியாக போகவில்லை இதை நம்பி மணிமேகலை கார், வீடு என பலவற்றை இஎம்ஐ வாங்கி வைத்து லோன் கட்ட முடியாமல் திண்டாடி வருவதாக யுடியூப் சேனலில் ரசிகர்களிடம் பகிர்ந்து உள்ளார்.

Also read:விஜய் அரசியலுக்கு வந்த பிறகு பிரச்சனைல மாட்டிவிடும் 5 விஷயங்கள்.. இதுக்கு சரின்னா அடுத்த முதல்வர் விஜய் தான்

Trending News