புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பட வாய்ப்புக்காக யாருடனும் அட்ஜஸ்ட் செய்ய மாட்டேன்.. வாய்விட்டு மாட்டிய சர்வைவர் பிரபலம்

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட விஜே பார்வதி, படிக்கும் பருவத்தில் பத்திரிக்கை நிருபராக பணியாற்றி உள்ளார். அதை தொடர்ந்து ரேடியோ தொகுப்பாளினியாக சிறிது காலம் பணியாற்றினார். இதன்பின் யூடியூப் சேனலில் சில பல சர்ச்சைகளுக்குரிய தலைப்புகளைப் பற்றி உரையாடி மக்கள் மத்தியில் அறிமுகமானார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குழாயடி சண்டை பிடிப்பது, பிறரை பற்றி குறை கூறுவது, தான் கூறுவதுதான் சரி என்பது போல நடந்து கொள்வது ஆகிய அனைத்து செயலிலும் ஈடுபட்டதால், சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வெகு விரைவில் வெளியேறினார் விஜே பார்வதி. சர்வைவர் மட்டுமல்ல இவர் எங்கு சென்று வந்தாலும் இவரால் பல பஞ்சாயத்துகள் நிகழும்.

தற்போது சர்வைவர் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பார்வதி, தன்னை பல தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்க அழைப்பதாகவும், அதேசமயம் தன்னிடம் அத்து மீறி நடக்க முயல்வதாகவும், அதனால் அந்த  தயாரிப்பாளர்களின் வாய்ப்பினை தவிர்க்க நேரிடுவதாகவும் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனக்கு வரும் அனைத்து பட வாய்ப்பும் இதன் காரணத்தினாலேயே தான் இழந்துவிட்டதாக விஜே பார்வதி கூறுகிறார். தற்போது தனக்கென்று நடிப்பதற்கு ஒரு படம் கூட இல்லை என்பதை வெளிப்படையாகக் கூறாமல், இவ்வாறு மறைமுகமாக தயாரிப்பாளர்கள் மீது குற்றம்சாட்டுகிறார்.

இவரின் காரணம் ‘கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்பதுபோல் இருக்கிறது. ஏற்கனவே இவரை கலாய்ப்பதில் ஆர்வம் காட்டி வரும் நெட்டிசன்களுக்கு இவர் கூறிவரும் கருத்துக்கள் சாதகமாக அமைந்துவிடுகிறது.

vj-parvathy-cinemapettai
vj-parvathy-cinemapettai

இதையெல்லாம் தாண்டி, ‘தான் வாய்ப்புக்காக யாரிடமும் வழுக்கி விழவில்லை என்றும் வாய்ப்பை தவறவிடலாம் ஆனால் வாழ்க்கையை தவறவிடக் கூடாது’ என்றும் விஜே பார்வதி பஞ்ச் டயலாக் அடித்துள்ளார். இதற்கிடையில் நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் வாய்க்கொழுப்பை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று விஜே பார்வதிக்கு அனைவரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

Trending News