தமிழ் சின்னத்திரையில் தவிர்க்க முடியாத தொகுப்பாளினிகளில் ஒருவர்தான் VJ பிரியங்கா. இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
மேலும் விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று கூறுமளவிற்கு அந்த சேனலில் பெரிய பங்கு வகிக்கிறார் பிரியங்கா. ஏனென்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை இவர்தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல், பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அழகைக் காண்பதற்காகவே பலர் விஜய் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பது உண்டு. அந்த அளவிற்கு திறமையான தொகுப்பாளினி தான் VJ பிரியங்கா.
அதேபோல், விஜய் டிவியில் பணியாற்றி வந்த பிரவீன் என்பவரை காதலித்து கடந்த 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா.
இந்த நிலையில் பிரியங்காவின் செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் பிரியங்கா, பிரவீன் ஜோடி செம க்யூட்டாக உள்ளனர்.
எனவே, பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.