சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

விரைவில் வீட்டுக்கு வரப்போகும் புது வரவு.. சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கும் பிரியங்கா

விஜய் டிவியில் பல தொகுப்பாளர்கள் இருந்தாலும் தன்னுடைய கணீர் குரலாலும், குறும்பு பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் விஜே பிரியங்கா. இவர் தொகுத்து வழங்கும் சூப்பர் சிங்கர், பிபி ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது.

அந்த அளவுக்கு நிகழ்ச்சியை இவர் சுவாரஸ்யத்துடன் கொண்டு செல்வார். இதனால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் கலந்து கொண்ட இவருக்கு சில எதிர்ப்புகள் இருந்தாலும் பைனல் போட்டி வரை வந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.

தற்போது மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். அதாவது இவருக்கு ரோகித் என்ற ஒரு தம்பி இருக்கிறார்.

இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. தற்போது அவரின் மனைவிக்கு விரைவில் குழந்தை பிறக்க இருக்கும் செய்தியை பிரியங்கா மகிழ்ச்சியுடன் தன்னுடைய ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தன் தம்பி மற்றும் அவரின் மனைவியுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் விரைவில் அத்தையாக போகும் பிரியங்காவுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் உங்கள் வீட்டில் எப்போது குழந்தை சத்தம் கேட்க போகிறது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பிரியங்கா கடந்த 2016ஆம் ஆண்டு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News