செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ரசிகர்களின் குயினாக மாறிய பிரியங்கா.. சோசியல் மீடியாவில் பெருகும் ஆதரவு

விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிவு பெற உள்ளதால் நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை வெற்றிபெறச் செய்ய தங்கள் ஓட்டுகளை ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

அதில் நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு மைக் கொடுத்து அதில் மக்களிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதை பேசலாம் என்று பிக்பாஸ் அறிவித்தார். இதனால் மகிழ்ச்சியான போட்டியாளர்கள் அனைவரும் இதுநாள்வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தங்களின் பங்களிப்புகளை பற்றி கூறி மக்களிடம் ஓட்டு கேட்டனர்.

அதில் பேசிய பிரியங்கா தன்னுடைய வழக்கமான கலகலப்பான பேச்சால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து விட்டார்.தற்போது ரசிகர்கள் அனைவரும் பிரியங்காவை சமூக வலைத்தளங்களில் குயின் பிரியங்கா என்று கொண்டாடி வருகின்றனர்.

அதாவது நேற்று மக்களிடம் பேசிய ப்ரியங்கா, நான் இது நாள் வரை உங்களுக்கு பிடிக்காத வகையில் நடந்திருந்தாலோ, பேசியிருந்தாலோ என்னை உங்கள் வீட்டுப் பெண்ணாக நினைத்து அதையெல்லாம் மறந்து விடுங்கள். தொகுப்பாளினி பிரியங்காவுக்கு எவ்வளவு அன்பை கொடுத்தீர்களோ அதே போன்று இப்பொழுதும் உங்கள் ஆதரவை எனக்குக் கொடுங்கள்.

இது நாள் வரை ஓட்டு போட்டு என்னை ஜெயிக்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி. இந்த வாரமும் எனக்கு உங்கள் அன்போடு, ஓட்டும் போடுங்கள் என்று பேசினார். பிரியங்காவின் இந்தப் பேச்சு ரசிகர்கள் அனைவரையும் ரொம்பவும் ரசிக்க வைத்தது. இதனால் பிரியங்காவுக்கு ஆதரவாக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதுவரை இருந்த பிக்பாஸ் போட்டியாளர்களில் பிரியங்கா மிகவும் ஸ்ட்ராங்கான பெண் என்றும், எவ்வளவு அவமானங்கள், கஷ்டங்கள் வந்தாலும் அதை தன்னுடைய சிரிப்பால் சமாளித்து முன்னேறி இருக்கிறார் என்றும் அவரை பாராட்டி வருகின்றனர்.

இத்தனை வாரம் இல்லாத அளவுக்கு பிரியங்காவுக்கு நேற்று ஒரு நாளிலேயே ரசிகர்களிடம் அதிக பாராட்டு மழை கிடைத்துள்ளது. இதனால் பிரியங்கா தற்போது குயின் பிரியங்காவாக சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகியுள்ளார்.

Trending News