வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

பூங்குழலியாக மாறிய VJ ரம்யா.. ரவிக்கை இல்லாமல் நடத்திய வைரல் போட்டோ ஷூட்

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமான VJ ரம்யா, சின்னத்திரை தொலைக்காட்சிகளில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரக்கூடிய ஒரு செலிபிரிட்டி ஆவார். இவர் முன்னணி சேனல்களான சன் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி போன்ற சேனல்களின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, பிரபலங்களை பேட்டி எடுப்பது மற்றும் படங்களின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என பயங்கர பிசியாக இருக்கக்கூடியவர்.

மேலும் VJ ரம்யா திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். இவர் 2007 ஆம் ஆண்டு வெளியான மொழி படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பிறகு 2011ம் ஆண்டு மங்காத்தா படத்தில் ரிப்போர்ட்டர் ஆக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Also Read: 10 பிரபலங்களுக்கு பல கோடி சம்பளத்தை வாரி வழங்கிய மணிரத்னம்.. முதல் மூன்று இடம் யாருக்கு தெரியுமா.?

மேலும் ஓ காதல் கண்மணி எனும் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு தோழியாக ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். இதனை அடுத்து கேம் ஓவர், ஆடை, மாஸ்டர், சங்கத் தலைவன் போன்ற நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருக்கும் ரம்யா எப்போதுமே தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிக கவனம் செலுத்துபவர்.

அதிலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இளசுகளை திணறடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.

பூங்குழலியாக மாறிய VJ ரம்யா

VJ-Ramya--cinemapettai
VJ-Ramya–cinemapettai

Also Read: சோழ ராஜ்யத்தை யார் கைப்பற்றியது? சிலிர்க்க வைத்த மணிரத்தினம், பொன்னியின் செல்வன்-2 முழு விமர்சனம்

இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் VJ ரம்யா, ஐஸ்வர்யா லட்சுமியின் பூங்குழலி கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதில் ரவிக்கை இல்லாமல் பூங்குழலியாக மாறி இருக்கும் VJ ரம்யாவை ரசிகர்கள் பலரும் வியந்து பார்க்கின்றனர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிகமாக ஷேர் ஆகுவது மட்டுமல்லாமல், ஏகப்பட்ட லைக்குகளையும் குவித்துக் கொண்டிருக்கிறது.

பூங்குழலி கெட்டப்பில் VJ ரம்யா

vj-ramya-cinemapettai
vj-ramya-cinemapettai

Trending News