புதன்கிழமை, ஜனவரி 15, 2025

15 வருடத்திற்கு முன் எடுத்த VJ ரம்யாவின் புகைப்படம்! தூர்தஷன்ல நியூஸ் வாசிக்கற மாதிரி இருக்காங்களே

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக தன்னுடைய கேரியரை துவங்கி, அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கும் பிரபல தொகுப்பாளினி ரம்யா, தற்போது வெள்ளித்திரையிலும் பல படங்களைத் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் கடந்த 2007ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக துணை நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பிறகு தற்போது ஒ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, மாஸ்டர், ஆடை போன்ற படங்களிலும் பல்வேறு வெப் சீரிஸ்களிலும் நடித்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சங்கத் தலைவன் படத்தில் ரம்யா, முற்றிலும் கிராமத்துப் பெண்ணாகவே மாறி தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டார். இவ்வாறு படங்களில் நடிப்பதில் பிஸியாக இருக்கும் ரம்யா, இரண்டு வருட கடுமையான உழைப்பிற்குப் பிறகு நியூயார்க் இன்ஸ்டிட்யூட் மூலம் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து சுகாதார பயிற்சியாளர் என்ற சான்றினை பெற்றுள்ளார்.

ஆகையால் தற்போது இணையத்தில் அவருடைய ரசிகர்களுக்கு பிட்னஸ் தொடர்பான வழிமுறைகளை குறித்து கருத்துக்களை தெரிவித்து கொண்டிருக்கிறார். அத்துடன் இவர் தனியாக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதன் மூலம் உடல் எடை சம்பந்தமான பயனுள்ள வீடியோக்களை பதிவிட்டு ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறார்.

vj-ramya-cinemapettai84
vj-ramya-cinemapettai

மேலும் ரம்யா தன்னுடைய கடுமையான உடற்பயிற்சியின் மூலம் கட்டுக்கோப்பான உடலமைப்பில் விதவிதமான ஆடைகளில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் அப்லோட் செய்கிறார். எனவே தற்போது சின்ன பொண்ணு போல் தோற்றமளிக்கும் ரம்யா, 15 வருடங்களுக்கு முன்பு குண்டு பப்பாளி போல் கொழுகொழுவென இருக்கும் புகைப்படம் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

இதை ரம்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதைப்பார்த்த ரசிகர்கள் பிரம்மிப்பூட்டும் மாற்றம் என்றும், உங்களுக்கு வயசு ஆக ஆக இளமை அதிகரிக்கிறது என்றும் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

Trending News