சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர் நடிகை ரம்யா. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் சின்னத்திரையிலிருந்து மொழி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அந்தப் படத்தை தொடர்ந்து ஓ காதல் கண்மணி, மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். அதேபோல் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் உடல் எடை சம்பந்தமான பல குறிப்புகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.
மேலும் தானிய உணவுகள் மற்றும் இயற்கை உணவுகள் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பல வீடியோக்களை அவர் தனது சேனலில் பகிர்ந்துள்ளார். இது தவிர அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தனது சோசியல் மீடியாவில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் ரம்யா தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆரம்ப காலத்தில் உடல் எடை கூடி சற்று குண்டாக இருந்த ரம்யா தற்போது உடல் இளைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் எலும்பும், தோலுமாக என்ன இப்படி மாறிட்டீங்க என்று கேட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு ரம்யா பார்ப்பதற்கு சிறு பெண் போன்ற தோற்றத்தில் இருக்கிறார். மேலும் அனைவரும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹெல்த் சம்பந்தமான பல கேள்விகளையும் அவரிடம் கேட்டு வருகின்றனர்.