திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

அருண் விஜய் படத்தில் இணைந்த விஜய் டிவி பிரபலம்.. வைகைப்புயல் இடத்தை நிரப்புவாரா.?

தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் கம் பேக் கொடுத்த அருண் விஜய், தற்போது மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். தற்போதெல்லாம் இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல் பலர் அருண் விஜய்யின் தீவிர ரசிகர்களாகவும் மாறிவிட்டனராம்.

தற்போது அருண் விஜய் அடுத்ததாக தன்னுடைய மச்சான் ஹரி இயக்கத்தில், ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். இந்தப்படம் அருண் விஜய்யின் 33வது படமாகும்.

அதேபோல் இந்தப் படத்தில் பன்னிரெண்டு வருடங்கள் கழித்து ஹரியும் ஜிவி பிரகாஷூம் இணைய உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

இந்த நிலையில் AV 33  படத்தில் விஜய் டிவியின் பிரபலம் இணைய உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஏற்கனவே அருண் விஜய்யின் 33வது படத்தில் யோகி பாபு, பிரகாஷ்ராஜ், பிரியா பவானி சங்கர், ராதிகா போன்ற நட்சத்திர பட்டாளம் நடிக்க உள்ள நிலையில், தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிரம்ஸ்டிக் புரோடக்சன் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், வைகைப்புயல் வடிவேலுவின் இடத்தை புகழ் கொஞ்சமாவது நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. ஏனென்றால் புகழ் பங்கேற்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முழுவதும் அவருடைய பாடி லாங்குவேஜ் மற்றும் பேசும் திறன் ஆகியவை கொஞ்சம் வடிவேலுவை ஒத்ததாகவே உள்ளது.

av-33-pugazh

ஏற்கனவே இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ள நிலையில், காமெடி நடிகரான புகழ் இந்தப் படத்தில் இணைந்து இருப்பது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும்  தூண்டியுள்ளது.

Trending News