பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் டிஎஸ்பி. அவருடன் இணைந்து அனு கீர்த்தி, விஜய் டிவி புகழ், சிவானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். மாமனிதன் திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் படம் வெளியாவதால் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர்.
ஆனால் இப்போது படத்தை பார்த்த பலரும் ஆள விடு சாமி என்ற ரேஞ்சுக்கு தெறித்து ஓடுகின்றனர். அந்த அளவுக்கு இந்த திரைப்படம் படு மொக்கையாக இருக்கிறது. பெரிய அளவில் இந்த படத்திற்கான ப்ரமோஷன் பெரிதாக செய்யப்படாத நிலையில் இப்போது படத்தை திரையிட்ட தியேட்டர்கள் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. முதல் காட்சிக்கே கூட்டம் குறைவாக இருந்த நிலையில் அடுத்தடுத்த காட்சிகளுக்கு ரசிகர்களின் கூட்டம் இல்லாமல் தியேட்டர்கள் பரிதாபமாக காட்சியளிக்கிறது.
சமீப காலமாக கதை தேர்வில் சொதப்பும் விஜய் சேதுபதி இந்த பட கதையை எப்படி தேர்ந்தெடுத்தார் என்பது தான் ஆச்சரியம். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களால் கவனம் ஈர்த்த பொன்ராம் அடுத்தடுத்த திரைப்படங்களில் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு சுதாரித்துக் கொள்ளாமல் இப்படி ஒரு கதையை அவர் எழுதி இயக்கி இருப்பது ஏன் என்று தான் தெரியவில்லை.
காலம் காலமாக தமிழ் சினிமாவில் காட்டப்பட்டு வந்த போலீஸ், ரவுடி கதைதான் இந்த படத்தின் கதையும். கதைப்படி விஜய் சேதுபதியை அரசாங்க வேலையில் அமர்த்த பாடுபடும் அப்பா, வேலை செய்யாமல் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, அவருக்கு எதிரியாக ஒரு ரவுடி இதை சுற்றி தான் கதை நகர்கிறது.
Also read: உடல் மண்ணுக்கு உயிர் சினிமாவிற்கு.. உடல்நிலை சரியான உடனே விஜய் சேதுபதியை தேடிச் சென்ற கமல்
ரவுடியை அடித்து துவம்சம் செய்யும் விஜய் சேதுபதி அவருக்கு எதிரியாகிறார். இறுதியில் அவர்கள் இருவரில் யார் ஜெயித்தார்கள், இதில் விஜய் சேதுபதி எப்படி போலீஸ் ஆனார் என்பதுதான் கதை. இதில் ஒரு காட்சியில் விமல் வேறு கேமியோ ரோல் செய்திருப்பதும் தேவையில்லாத ஒரு விஷயம். சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் சேதுபதியின் படம் என்றால் ஆர்வத்துடன் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். ஆனால் இப்போது அவர் ஹீரோவாக மெல்ல மெல்ல சறுக்கிக் கொண்டிருக்கிறார்.
ஒருவேளை அவருக்கு வில்லன் கதாபாத்திரம் தான் பொருத்தமா என்று தெரியவில்லை. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் அவர் ஆக்சன், காமெடி போன்ற காட்சிகளில் பல இடங்களில் திணறுவது நன்றாகவே தெரிகிறது. அதனாலேயே படத்தை சில நிமிடங்கள் கூட பார்க்க முடியாமல் ஆடியன்ஸ் திணறி விட்டனர். மேலும் இந்த படத்திற்காக விமர்சனங்களை கூற கூட யாரும் முன் வரவில்லை. ஆக மொத்தம் இந்த திரைப்படம் விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஒரு தோல்வியை கொடுத்திருக்கிறது. இனிமேலாவது அவர் எல்லா படங்களையும் ஒப்புக் கொள்ளாமல் கதைகளை சரியாக தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும்.