வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

மோகன்லாலிடம் எச்சரிக்கை, பிரபல தயாரிப்பாளரிடம் கூறிய சூப்பர் ஸ்டார்.. ஏன் இப்படி சொன்னாரு ?

இந்தியாவில் மலையாள சினிமா என்பது மதிப்புக்குரிய ஒன்றாக உள்ளது. பல வித்தியாசமான, புதிய கதை, திரைக்கதை அம்சங்களுடன் வருவதால் அனைவரும் மலையாள சினிமாவை ரசிக்கின்றனர். இங்கு பல நடிகர்கள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார்களாக மம்முடியும், மோகன்லாலும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளனர். பல வித்தியாசமான படங்களில் பல்வேறு கேரக்டர்களில் நடித்து மக்களைக் கவர்ந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளாக உச்ச நடிகர்களாக இருவரும் கோலோட்சி வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திரையுலகில் அறிமுகமாக யாரையும் நம்பியிருக்கவில்லை. ஆனால் கடும் உழைப்பும் முயற்சியும் அவர்களுக்குக் கைகொடுத்தது.

ஆரம்பத்தில் மம்முட்டி துணை கேரக்டர்களில் நடித்து ஹீரோவாக உயர்ந்தார். அதேபோல் மோகன்லாலும் ஆரம்பத்தில் சிறிய ரோல்களிலும், நெகட்டிவ் ரோல்களிலும் நடித்து இன்று உச்ச நடிகராக இருக்கிறார். இவர்கள் இருவரும் இப்படி கஷ்டப்பட்டு வந்தாலும் மம்முட்டியின் அழகான தோற்றம் அவருக்கு விரைவிலேயே ஹீரோவாக உயர உதவியது. ஆனால் மோகன் லாலுக்கு கொஞ்சம் லேட்டானது.

இருவரின் திறமையை அன்றே கணித்த சூப்பர் ஸ்டார் மம்முட்டி

ஆனால், மோகன்லால் உச்ச நட்சத்திரமாக வளரும் முன்பே அவரை நட்சத்திரமாக கணித்து, முன்னறிவித்தது மம்முட்டிதான். ஒருமுறை கைரளி டிவியில் உரையாடல் நிகழ்ச்சியின் போது. தனது நண்பர் மற்றும் தயாரிப்பாளருமான ஸ்ரீனிவாசனிடம், ’’மோகன் லால் சினிமாவில் விரைவில் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பார். தனக்கு அச்சுறுத்தலாக வெளிப்படுவார்’’ என்பதை வெளிப்படையாக கூறினார் மம்முட்டி.

அதேபோல் சென்னை நியூ உட்லாண்ட்ஸ் ஓட்டலில், ஸ்ரீனிவாசனிடம், ’’நாம் அவரைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார். அது யாரைக் குறிப்பிடுகிறீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் மோகன்லால் விரைவில் ஹீரோவாக வருவார் என்பது மட்டுமல்ல எனக்குப் போட்டியாளராகவும் வர வாய்ப்புள்ளது’’ என்று மம்முட்டி புத்திசாலித்தனாக குறிப்பிட்டிருந்தார்.

மோகன்லாலை நன்கு கணித்த மம்முட்டிதான், ’’இயக்குனர் பிரியதர்சன் மிகத் திறமையானவர், சிறிய மேதை, வாய்ப்புகள் கிடைத்தால் மலையாள சினிமாவில் ஜொலிப்பார்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் காலம் இந்திய சினிமாவில் சிறந்த இயக்குனரை அறிமுகம் செய்தது. எனவே இரு திறமையாளர்களை அவர்களின் செயல்பாடுகள் வைத்து ஒருவர் சூப்பர் ஸ்டாராகவும், சிறந்த இயக்குனராகவும் வருவார்கள் எனக் கணித்த மம்முட்டியைப் பற்றி பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர்.


Trending News