ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வாய்ப்பு கொடுக்கணும்னு நினைச்சது தப்பா?. சிவகார்திகேயனால் தூக்கம் இல்லாமல் தவிக்கும் கமல்

Kamal and Sivakarthikeyan: பொதுவாக கமலின் நடிப்பை குறை சொல்ல முடியாத அளவிற்கு எதார்த்தமான நடிப்பை தத்துரூபமாக கொடுக்கக் கூடியவர். அப்படிப்பட்டவரை லோகேஷ் சரியான நேரத்தில் பயன்படுத்தி விக்ரம் படத்தை கொடுத்தார். இப்படம் வெற்றி அடைந்ததன் மூலம் கமலுக்கு நல்ல நேரம் கூடிவிட்டது. தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் நடிப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை தயாரிப்பில் போட்டு அதிலும் லாபத்தை பார்க்க துணிந்து விட்டார்.

அதனால் தற்போது எந்த நடிகரை வைத்து படத்தை தயாரித்தால் நஷ்டம் ஏற்படாதோ அதை சரியான முறையில் செய்யும் விதமாக சிவகார்த்திகேயனை தூக்கி விட்டார். அந்த வகையில் எஸகே அவருடைய 21வது படமான அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி கமல் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக மும்மரமாக போய்க்கொண்டிருக்கிறது.

அதுவும் இப்படம் ஒரு பயோபிக் படமாகவும் ராணுவத்திற்கும் தீவிரவாதிக்கும் ஏற்படும் சண்டையை மையமாக வைத்து கதை நகர்ந்து வருகிறது. அந்த வகையில் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் கதையை முன்னுறுத்தி காட்டி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து இப்படம் ஏப்ரல் மே மாத விடுமுறை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவருவதாக இருந்தது.

Also read: போதையை கருவாக வைத்து வெளிவந்த பிரபலமான 5 படம்.. சங்கடத்தில் தவித்து வரும் லோகேஷ்

ஆனால் தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப் போயி ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் பண்ணலாம் என்று பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையில் கமல் இப்படத்திற்கான பட்ஜெட்டை கம்மி பண்ணுங்கள் என தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறார். ஆனால் தற்போது இவர் சொன்ன பட்ஜெட்டையும் தாண்டி 25 கோடி எக்ஸ்ட்ராவாக ஆயிருக்கிறது.

அதுபோக இன்னும் படப்பிடிப்பு கொஞ்சம் இருக்கிறது. அப்படி என்றால் போகப்போக பட்ஜெட் இன்னும் அதிகமாகும். அதனால் எப்படியும் கமலிடம் இருக்கும் மொத்த பணமும் காலி ஆக்காமல் விடமாட்டார் போல இயக்குனர். அந்த வகையில் தற்போது கமலின் மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கிறது என்றால் வாய்ப்புக் கொடுத்து சிவகார்த்திகேயனை தூக்கி விடனும் என்று நினைத்தது ஒரு குத்தமா? என்று புலம்பும் நிலைமையில் இருக்கிறார்.

ஏனென்றால் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் என்னதான் மக்களிடம் வரவேற்பை பெற்றாலும் சமீபத்தில் அவருடைய இமேஜ் டேமேஜ் பண்ணும் விதமாக பெண்கள் விஷயத்தில் ரொம்பவே மாட்டிக் கொண்டார். இதனால் தளர்ந்து போய் இருந்த சிவகார்த்திகேயனுக்கு கமல் கை கொடுத்து இப்படத்தின் மூலம் தூக்கி விட நினைத்தார். ஆனால் தற்போது நிலைமை படி பார்த்தால் கமலை தான் யாராவது கை கொடுத்து தூக்கி விடனும் போல அப்படித்தான் இருக்கு.

Also read: வாலைச்சுருட்டி கொண்டு கப்சிப் ஆன சிவகார்த்திகேயன்.. இதுவரை வாங்குன அடி போதும்டா சாமி

Trending News