வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாரிசு ஹீரோ முதலில் விஜய் இல்லையாம்.. வாயை விட்டு வம்படியாக மாட்டிக் கொண்ட தில் ராஜு

விஜய் வாரிசு படத்தில் கமிட்டானதும் போதும் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். ஒரு வழியாக படம் நிறைவுற்ற நிலையில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் இருந்தது. அதாவது தெலுங்கில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அங்குள்ள நடிகர்களின் படங்கள் தான் வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

ஆகையால் வாரிசு படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளதால் அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு வழியாக இப்போது தான் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாவது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இன்று மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது இப்படத்தில் தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது தான்.

Also Read : சிம்பு மீது காண்டான அஜித், தனுஷை வைத்து போடும் பக்கா பிளான்.. விஜய்யின் வாரிசு படத்தால் வந்த வம்பு

அதாவது தமிழ்நாட்டில் அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் வாரிசு படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என்று உதயநிதியிடம் முறையிட போவதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மற்றொரு விஷயத்தை தில் ராஜு போட்டுடைத்துள்ளார்.

அதாவது வாரிசு படத்தில் முதலில் மகேஷ்பாபு, ராம்சரண் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர்கள் தெலுங்கில் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு தான் இந்தப் படத்தில் விஜய் நடிக்கலாம் என்ற யோசனை எங்களுக்கு வந்தது.

Also Read வாரிசுக்கு முட்டுக்கட்டை போட நினைத்த ஷங்கர்.. செக் வைத்த அனுப்பிய தயாரிப்பாளர் தில் ராஜ்

விஜய் இடம் இந்த கதையை சொன்னவுடன் 30 நிமிடத்தில் ஒத்துக்கொண்டார் என்று தில் ராஜு கூறியுள்ளார். ஆகையால் மகேஷ்பாபு, ராம்சரண் போன்றோருக்கான கதை என்றால் இது தெலுங்கு மொழியில் உருவான கதை தான் இருக்கும் என்று ரசிகர்கள் கணித்துள்ளனர்.

ஆனால் இப்படத்தின் இயக்குனர் வம்சி பேசுகையில் இது முழுக்க முழுக்க ஒரு தமிழ் படம் என்று கூறியுள்ளார். தெலுங்கிலும் இப்படம் டப் செய்து வெளியாகிறது என்று கூறினார். மேலும் விஜய் பீஸ்ட் பட பேட்டியில் இது தமிழ் மொழியில் எடுக்கப்படும் படம் தான் என்று கூறியிருந்தார். தில் ராஜு இப்படி சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Also Read : உதயநிதி, விஜய்க்கு இடையே மறைமுகமாக ஏற்பட்ட சண்டை.. வாரிசு மேடையில் பதிலடி கொடுக்க நாள் குறித்த இளையதளபதி

Trending News