தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக, இயக்குனராக, டான்ஸராக, தயாரிப்பாளராக பல முகங்களைக் கொண்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் பிரபுதேவா. 1995ல் ராம்லாதா என்ற பெண்ணை திருமணம் செய்து பின்பு விவாகரத்தானது. 2009-ல் நயன்தாராவுடன் லிவிங் டுகதர் வாழ்க்கையில் வாழ்ந்தார்.
தனது 32 ஆவது வயதில் பெஸ்ட் கோரியோகிராபிக்கு இரண்டு நேஷனல் பிலிம் அவார்டு விருதுகளை வென்றவர், 2019 பத்மஸ்ரீ விருதையும் வாங்கியுள்ளார்.
அதாவது நடனத்திற்கு தனது வாழ்க்கையை அர்ப்பணித்ததற்காக பத்மஸ்ரீ விருதை வாங்கியுள்ளார். 90-களில் முன்னணி நடிகர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் பிரபுதேவா ஏனென்றால் நடிப்பை தாண்டி நடனத்தில் பட்டையக் கிளப்பி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பிரபுதேவா தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்தவர் அந்த வரிசையை தற்போது பார்க்கலாம்.
மின்சார கனவு:
ராஜீவ் மேனன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, பிரபுதேவா, கஜோல் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது மின்சாரக்கனவு. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருப்பார். வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு பிரபுதேவாவிற்கு தேசிய விருதே கிடைத்தது. ஆனால் படம் படு தோல்வி அடைந்தது. இருந்தாலும் கஜோல் நடித்ததால் பிரபு தேவாவை இந்த படம் இந்திய அளவில் கொண்டு சேர்த்தது.
அரவிந்த்சாமி ஒரு தலைபட்சமாக கஜோலை காதலித்து வருகிறார், காதல் என்றால் என்ன என்பதை புரிய வைப்பதற்காக பிரபுதேவாவை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தும் சூழ்நிலையில் கஜோல் மற்றும் பிரபுதேவா காதல் வலையில் விழுந்து விடுகிறார். கடைசியில் அரவிந்த்சாமி திருமணம் செய்து வைப்பது தான் இந்த படத்தின் கதை.
வி.ஐ.பி:
சபாபதி இயக்கத்தில் பிரபுதேவா, சிம்ரன், ரம்பா போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது. ரொமான்டிக் கலந்த காமெடி படம் என்பதால் ரசிகர் மனதில் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்றது.
பெண்ணின் மனதை தொட்டு:
எழில் இயக்கத்தில் பிரபுதேவா, ஜெயா போன்ற வரும் நடிப்பில் வெளிவந்தது பெண்ணின் மனதை தொட்டு. இந்த படத்தில் சரத்குமார் ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். இதில் பிரபுதேவா தலைசிறந்த ஹார்ட் ஆபரேஷன் செய்யும் மருத்துவராக நடித்திருப்பார். இந்த படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி பெற்றது.
காதலன்:
முதல் முறையாக ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரபுதேவா, நக்மா நடிப்பில் காதலன் படம் வெளிவந்தது. ரொமான்டிக் மற்றும் திரில்லர் கலந்த இந்த படத்தை கே டி குஞ்சுமோன் தயாரித்துருப்பார். ரகுவரன், வடிவேலு போன்ற பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துருபார்கள். இந்த படம் 2 சவுத் பிலிம் ஃபேர் விருதுகள், 4 நேஷனல் பிலிம் அவார்டு விருதுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது. படத்தின் வெற்றியை வைத்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
ஏழையின் சிரிப்பில்:
கே சுபாஷ் இயக்கத்தில் பிரபுதேவா, ரோஜா, கௌசல்யா, சுவலட்சுமி, விவேக் நாசர் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது ஏழையின் சிரிப்பு. மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த படம், சூப்பர் ஹிட் கொடுத்தது இல்லாமல் வசூல் சாதனை படைத்தது. இதில் பிரபுதேவா கூடலூரில் பஸ்சுக்கு பயணிகளை ஆள் சேர்க்கும் வேலை பார்ப்பது போல் நடித்திருப்பார், காமெடி கலந்த இந்த படம் ரசிகர் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்து என்றே கூறலாம்.
மனதை திருடிவிட்டாய்:
நாராயணமூர்த்தி இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு, கௌசல்யா, காயத்ரி ஜெயராமன், விவேக், சிம்ரன் போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது மனதை திருடிவிட்டாய். யுவன்சங்கர்ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பார். பிரபுதேவா மற்றும் வடிவேலுவின் காமெடி இந்த படத்தில் மிக அதிகமாக பேசப்பட்டது. 100 நாட்களை தாண்டி சூப்பர் ஹிட் படமாக பிரபுதேவாவிற்கு அமைந்தது. வடிவேலு, விவேக் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றே கூறலாம்.
சார்லி சாப்ளின்:
பிரபுதேவா, லிவிங்ஸ்டன், அபிராமி போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது சார்லி சாப்ளின். அந்த வகையில் இந்த படமும் ரசிகர்களிடம் மாபெரும் வெற்றி பெற்றது, இந்த படத்தின் வெற்றியை வைத்து பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் இரண்டாம் பாகமும் 2019 வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
தேவி:
காமெடி கலந்த ஹாரர் மூவியாக மாபெரும் வெற்றி பெற்ற படம். ஒரே நேரத்தில் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கிட்டத்தட்ட 11 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாம், 3 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்தது.