செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

சீரியல் பார்த்தா தூக்கு, 30 மாணவர்களுக்கு தண்டனை.. கடுமையான சட்டத்தால் விழி பிதுங்கும் மக்கள்

Strict laws: நமக்கெல்லாம் பொழுதுபோக்கே குடும்பத்துடன் உட்கார்ந்து நேரத்தை செலவழிக்கும் விதமாக சீரியல்களை பார்ப்பதுதான். அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவியில் விளம்பரங்கள் போடும் போது மாத்தி மாத்தி மற்ற சீரியல்களை பார்த்தால் தான் தூக்கமே வரும். இப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு நாட்டில் சீரியல் பார்த்ததற்காக தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதே கேட்டதும் இது என்னடா பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்று தோன்றுகிறது.

தென் கொரியா நாட்டின் தலைநகரமாக இருக்கும் சீயோலில் வடகொரியா மக்கள் கடுமையான சட்டத்தின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள். பொதுவாக வடகொரியாவில் ரொம்பவே கடுமையான சட்டங்களை அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு தென் கொரியா மற்றும் அமெரிக்காவை நாடிப் போவதாக ஊடகங்கள் மூலம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஒரு கடுமையான சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது வடகொரியாவில் உள்ள மக்கள் தென் கொரியாவில் உள்ள நாடகங்களை பார்த்ததற்காக வடகொரியா அரசு பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு மரண தண்டனை கொடுத்திருக்கிறது என Chosun TV மற்றும் Korea JoongAng Daily மூலம் தென்கொரியா ஊடகங்களுக்கு தெரிவித்து இருக்கிறது.

சித்திரவதை அனுபவிக்கும் மக்கள்

அந்த வகையில் தென்கொரியா செய்தி ஊடகங்கள் கூறி இருப்பது என்னவென்றால், வடகொரியாவில் இருந்து வெளியேறிய அவர்கள் அந்நாட்டு எல்லையில் சில யூஎஸ்பிகள்யூ ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் மூலம் தென்கொரியாவின் சீரியல்கள் வடகொரியாவிற்குள் நுழைகிறது.

அதன்படி வடகொரியாவில் உள்ள மக்கள் அந்த சீரியல்களை பார்த்து வருவதாக தெரிந்த நிலையில் கடுமையான சட்டங்கள் அந்நாட்டில் வசித்து வரும் மக்களை கொடுமைப்படுத்தும் அளவிற்கு போடப்பட்டிருக்கிறது.

வட கொரியாவின் பிற்போக்கு சிந்தனையால் மற்றும் கலாச்சார நிராகரிப்பு சட்டம் அதிகமாக இருப்பதால் தென்கொரியா மற்றும் ஜப்பானிய படங்கள் வடகொரியாவிற்குள் நுழைவது தடுக்கப்படுகிறது. இந்த சூழலில் அண்டை நாடுகளின் படங்களை பார்த்ததற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு ஒருவர் கொல்லப்பட்டு இருக்கிறார்.

இதனை தொடர்ந்து பென்டிரைவ் மூலம் படத்தை பார்த்ததற்காக வடகொரியா அரசு ஒருவரை சுட்டுக் கொண்டிருக்கிறது. அதைப்போல் இந்த ஆண்டு தொடக்கத்தில்இரண்டு இளைஞர்களை k pop வீடியோவை பார்த்ததற்காக 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

இப்படி தொடர்ந்து வடகொரியாவில் உள்ள மக்கள் சித்திரவதை அனுபவித்து வரும் நிலையில் தற்போது தென் கொரியா சீரியல்களை பார்த்ததற்காக 30 மாணவர்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் தூக்கு தண்டனை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாயிருக்கிறது. இப்படி எதற்கெடுத்தாலும் கடுமையான தண்டனை கொடுத்து வரும் அந்த நாட்டு அரசாங்கத்திலிருந்து மக்கள் எப்படியாவது வெளியேற வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

உலகத்தில் நடந்த அதிர்ச்சியான சம்பவங்கள்

Trending News